பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 இன்பவியல் நல்ல தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பொன்னனைய திருமகளே! நீ, பொன் போன்ற நல்ல மாந்தரைவிட்டு நீங்கி, மாறுபட்ட அற்ப மாந்தர் பக்க்ம் சேர்ந்துள்ளாய்; ஆதலின், மணமற்ற மலரிதழ் போல் மதிப்பிழந்து, இவ் வுலகில் சாம்பலாய் அழிந்து போ! 266 வேல் விழியாளே! நயமான நல்லவரிடம் உள்ள வறுமைக்கு நாணம் இல்லைபோலும்! பிறர்க்குப் பயன் படாதவரிடம் உள்ள செல்வம் அவரிடமே பெருகி ஒட்டிக் கொண்டிருக்கப் பிசின என்ன! இவ்விரண்டும் ஆங்காங்கே பொருந்தாது மாறி நிற்கு ம் நிலமையைக் கண்டு யப்பாயாக! - - 267 நாணயக்கேடும் . நயவஞ்சக்மும் இல்லாத நல்லோர் காலால் வழிகடந்து வருந்திச் சென்று கலவைக்கீரை முதலான உணவுகளை உண்டு காலங்கழிப்பர். நாணயக் கேடும் - நயவஞ்சகமும் உள்ளவர்கள் (வலவைகள்), காலால் நடந்து வேறிடம் செல்லார்; வீட்டிலேயே உணவின்மேல் பாலாறு - நெய்யாறு மு த லி ய, ன பாய, பொரியல் வகையுடன் தாம்மட்டும் விருந்து ೬.ru 26 பொன்னிறமான செந்நெல்பயிர் கதிர்ப்பொதியுடன் உள்கரு வாடிக்கிடக்க, மின்னல் வீசும் மேகமானது கடலிலே நீரைக் கக்கிச் சொரிவதுண்டு. அறியாமையுள்ள அற்பர் பெரிய செல்வம் அடைந்தபோது, அவரது கொடை யும் அம்மேகம் போன்றதே!. - 269 நல்லுணர்வு இல்லாதவர் கற்றிருப்பினும் கல்லாதவரே யாவர்; நல்லுணர்வு உடையவர் கற்றில்லாவிடினும் கற்ற வர் போன்றவரே! தூய உள்ளத்துடன் ஒழுகி, பிறரிடம் ஒன்றும் இரவாதவர் வறுமையுற்றிருப்பினும் செல்வரே யாவர்; செல்வரும் பிறர்க்கு ஒன்றும் உதவார் என்ருல் வறியவரே! 270