பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 பகையியல் 34. மடமை கொல்லுதல் வல்ல கொடிய யமன் உயிரைப் பிடிக்க நாளும்-கோளும் பார்த்திருக்க, இவ்வுலக இன்பமாகிய வலையில் அகப்பட்டு இறுமாந்திருப்பவரது தன்மை, கொலே காரர் ஆமையைத் தண்ணிரில்போட்டுஉலையிலே வைத்துக் கீழே தீ மூட்ட, ஆமையானது சிறிது நேரத்தில் தாம் இறக்கப்போவதை அறியாமல் அந்தத் தண்ணிருக்குள் மூழ்கி விளையாடுவது போன்றதாகும். 331 குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய செயல்களின் குறைகளை நீக்கி நிறைவு செய்து, பிறருக்குச் செய்யத்தக்க நல்ல அறச் செயல்களைப் பிறகு பார்த்துக் கொள்வோம் என்று தள்ளிப் போடுபவரின் தன்மை, பெரிய கடலில் குளிக்கச் சென்றவர், ஒருசேர அலையோசை அடங்கிய பின் குளிப்போம் என்று கர்த்திருப்பது போன்றதாகும். 332 உயர்குலம், தவம், கல்வி, நற்குடிப் பிறப்பு, முதுமை ஆகிய ஐந்தையும் குறையாமல் ஒருவன் அடைந்திருப் பினும், நன்மை மிக்க்குற்றம் அற்ற்-பழம் பெருஞ் சிறப் புடைய உலக நடைமுறையை அறியாது ஒழுகுதல், (பாலில் வேக வைத்துச் சமைத்தாலும்) நெய்யில்லாத சோற்றை உண்பதற்கு நேராகும். 333 கருங்கல் பாறைகள், பிறர் சொல்லும் சொற்களைத் தாம் நன்கு உணரமாட்டா என்ருலும், தம்மை அடைந்தவர்க்கு, அப்பொழுது-அப்பொழுதே, தம்மேல் நிற்பதற்கும் அமர் வதற்கும் படுப்பதற்கும் நடப்பதற்கும் ஆகப் பலவகையில் தாம் உதவியாயிருப்பதால், கீழ்ப்பட்ட மக்களினும் மிகவும் நல்லவையாம். 334 சினந்து பேசுவதால் பெறக்கூடிய நன்மை ஒன்றும் இல்லையாயினும் ஏதோ பெற்றவன்போலக் கறுவிக்கொண்டு தமக்கு ஒப்பாகாத உயர்ந்தோரிடத்தும், சினத்தில்ை இனிமையற்ற சொற்களைத் தொடுத்துப் பேசித் திட்டா விடின், அறிவில்லாதவனுக்கு, நாக்கு தன்னைத் தின்று வருத்தும் சுனே உடையதாயிருக்கும். 335