பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 பகையியல் நல்ல தளிரையுடைய புன்னே பூத்துக் குலுங்கும் கடற் கரை நாடனே ! தம்மிடம் நல்ல பண்பு இல்லாதவரின் பின்னே போய், அவரை எப்படியாவது எம் வழிப்படுத்தி விடுவோம் என்று எண்ணுபவரின் அற்ப நட்புமுயற்சி, கருங்கல்லேக் கிள்ளிக் கிள்ளிக் கையைக் கெடுத்துக் கொண் டது, போலாம். 336 கிடைக்காது என்ருலும் ஒரு கலத்துள்ளே நெய் இருக்கு மாயின், விட்டுப் போகாமல் எறும்புகள் வெளியே சுற்றிக் கொண்டேயிருக்கும். அதுபோல், யாதொன்றும் உதவார் என்ருலும், செல்வமுடையவரை உலகினர் பின்பற்றி விடாது சுற்றுவர். 337 அறிவிலிகள், நல்லவர் அவையை நாடோறும் அடைந்து பழகார்; நல்லறம் செய்யார்; வறியார்க்கு யாதொரு பொருளும் ஈயமாட்டார்; எல்லா வகையிலும் இனிய தம் மனைவியர் தோளைத் தழுவார்; புகழ் உண்டாக வாழ மாட்டார்; இத்தகையவர்கள் தாம் வாழும் நாளை வெறுக்க மாட்டார்களோ ? - 33 ஒருவர் இன்ைெருவரை விரும்பி வியந்து நட்புகொள்ள, இவரை யாம் விரும்பமாட்டோம் என்று புறக்கணிக்கும் படியான போலி நட்பு, ஆராயும் அறிவுநலம் இல்லாத அவரைப் பொறுத்தமட்டில், முழங்கும் ஒலியுட்ன் பாயும் அலைகடல் சூழ்ந்த இவ்வுலகமே கிடைப்பதாயினும் துன்பமே ! 339 ஒருவன் கற்ற கலைகளையும் கண்ணிரக்கம் மிக்க மென்மைப் பண்பையும் உயர்குடிப் பிறப்பையும் பக்கத்தி லுள்ள மற்றவர் பாராட்டிேைலயே பெருமை ஏற்படும். தானே சொல்லிக்கொண்டால், (பரிகசிக்கும்) மைத்துனர் மார்கள் பலர் ஏற்பட்டு, மருந்தில்ை திராத பைத்தியக் காரன் என்று இகழப்படுவான். - 340