பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 பகையியல் ஆழியுருட்டும் அரசச் செல்வம் பெற்ருலும், மேலோர் எப்ப்ோதும் வரம்பு மீறிய பேச்சுப் பேச்மர்ட்டார்கள். தீழ் மகன், முந்திரி (11320) அளவுக்குமேல் காணி (180) அளவு பொன் மிகுதியாகப் பெற்ருலும் தன்னை எப்போதும் இந்திரனுகவே எண்ணிக்கொள்வான். 346 குற்ற மற்ற பசும்பொன் தகட்டின்மேல் சிறந்த மணி களைப் (இரத்தினங்களைப்) பொருத்திச் செய்யப்பட்ட தென்ருலும் செருப்பு தன் காலின் கீழே இருத்தற்கு உரியதேயாம். அதுபோலவே, கீழோர் மிகத் திரண்ட செல்வமுடையவ ரானலும் அவர் செய்யும் செயலால் அவரைக் கீழானவர் என அறிந்து கொள்ளலாம். 347 வன்மையான நல்ல மலே நாடனே கீழ்மகன், பிறர் உள்ளம் கடுக்கும்படிப் பேசவல்லவரும், கண்ணிரக்கமே இல்லாதவளும்; பிறரிடம் துன்பம் உண்டானல் மகிழ்வான்; அடிக்கடி சினம் உடையவனுவான்; எங்கும் செல்லுவான்; யாரையும் இகழ்வான். 348 தேன் தளும்பும் நெய்தல் மலர் நிறைந்த-ஒலிக்கின்ற குளிர்ந்த கடற்கரை நாடனே ! . இவர் பழைய நண்பர் என்று பலநாளும் தம் பின் வந்து நின்ருலும், உயர்ந்தோர், வந்தவரிடம் இனிமையாகப் பழகுவர். கீழ்மக்களோ, வந்த வரை விரும்பாமல் இகழ்வர். ... • . 349 ஐயனே, கேள்! அறுத்த புல்லேக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து என்றும் ஊட்டி வளர்த்தாலும், சிறிய எருதுகள் தேரை இழுக்கம்ாட்டா. திரண்ட செல்வம் உடையவ ரானுலும், செய்யும் செயலேக்கொண்டு கீழ்மக்களை அடை யாளம் கண்டுகொள்ளலாம். - 350