பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 இன்பதுன்பவியல் துளைத்துக் கோத்த நூலும் மணியும் போலவும், இணை பிரியாத அன்றில் பறவைகள் போலவும் நிதமும் நம்மைப் பிரியவே மாட்டோம் என்று உறுதிகூறியு. பொன் வளையல் அணிந்த அவ்வேசிப் பெண்ணும், ப்ோரிடும் ஆட்டுக் கடாவின் கொம்புகள் போல் வேறு பக்கம் முறுக்கிக் கொண்டாள். எனவே, எனது நல்ல மனமே ! நீ அவள் பக்கமே இருக்கப் போகிருயா ? என் பக்கம் வரப் போகிருயா ? 376 காட்டுப்பசு நக்குவதுபோல் முதலில் இன்பமாக நடந்து, வந்தவரின் கைப்பொருளைப் பறித்துக்கொண்டபின், சண்டி எருதைப்போல் குப்புறப்படுத்துக்கொள்ளும் அற்பப்பரத்தை யின் போலி அன்பை நம்பி ஏமாந்து எமக்குரியது என்று இருந்தவர் தாம் பலராலும் நகைக்கப்பெறுவர். 377 ஆடவர் ஏமாந்தபோது இனியவர் போன்று நடித்து, தாம் செல்வம் நிரம்பியபோது இனிமையற்றவராய் ஆட்டுக் கடாவின் கொம்புகள் போல் முறுக்கிக் கொள்ளுகிறமான் போலும் மருண்ட பார்வையுடைய தம் போக்கில் செல்கிற விலை மாதரின் பெரிய கொங்கைகளே, நல்வழி யடைவோம் என்று முயல்பவர் தழுவார். 378 விளங்கும் நெற்றியுடைய விலைமகளிர் துன்பம் செய்யும் தம் நெஞ்சின் வஞ்சகத்தை உள்ளே மறைத்து நம்பும்படிச் சொல்லும், சொற்களைக் கேட்டு நம்பி, இப் பெண்டிர் எமக்கு உரியர் என்று நம்பக்கூடியவரும் நம்பத்தான் செய்கின்றனர். ஆனல், தம் உடம்பைத் தமக்கே உடைய அப் பெண்டிர் எவருக்கும் உரியவரல்லர். 379 விளக்கமான நெற்றியுடைய வேசியர், மனம் வேருெரு வன் பக்கம் இருக்க, வஞ்சகமாய்ச் செய்யும் செயல்முறை யெல்லாம் உலகினரால் தெளிவாக அறியப்பட்டிருந்தும், பாவம் நிறைந்த உடம்பை யுடைய முடர் அ ಶೌur೭ 38