பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 இன்பவியல் செவ்வாம்பல் மலர்போல் மணக்கும் வாயினையும் அழகிய இடுப்பையும் உடைய,என் மகளுக்கு, செந்நிறம் பொருந் திய சாயக்குழம்பைப் பஞ்சிகொண்டு பூசிலுைம், மெது வாக-மெதுவாக என்று கூறி அஞ்சிப் பின் இழுத்துக் கொண்ட காலடிகள், (இப்போது தன் காதலனுடன்) பருக்கைக் கற்கள் பொருந்திய காட்டு வழியில் செல்லும் கடுமையைத் தாங்கிக் கொண்டனவோ ? 396 ஒலயில் எழுதிய நூலைப் படிக்கும் பள்ளிக்கூடத்தார் களின் ஒசை அடங்கிய - சிறிது நேரம் செவ்வானம் பொருந்திய மாலேநேரத்தில், தன்னை மணந்த கணவர் பிரிவதை எண்ணி, மாலையை அறுத்தெறிந்து, தன் அழகிய முலேயின் மேல் அழகு செய்து பூசிய சந்தனத்ன்த அழித்துத் தலைவி அழுது புலம்பினள். 397

ஒளியுடைய வளையல் அணிந்த என் தோழியே ! கடக்க முடியாத காட்டு வழியிலே காளைபோன்ற காதலன் பின்னே நாளே நடந்து செல்லவும் வலிமை உடையையோ-என்று நீ கேட்கிருய்! பெரிய குதிரையைப் பெற்றவன் ஒருவன், பெற்ற அப்போதே அதன்மேல் ஊர்ந்து(சவாரி) செல்லும் முறையினையும் கற்றிருப்டான். . 398 (என் மகள்) தன் முலைக்கண்களும் முத்துமாலேயும் முழு உடலும் பதியும்படி என்னைத் தழுவிக்கொண்ட குறிப்பை யான் (நேற்று) சிறிதும் அறிந்திலேன். என் பொலிவு மிக்க பதுமை போன்ற மகள் செய்த குறிப்பு, மான் கூட்டம் புலிக்கு அஞ்சும் காட்டு வழியிலே (ஒருவரும் அறியாமல் தன் காதலனுடன்) செல்வதற்குப் போலும் ! 399