பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭვ இல்லறவியல் ஒருவரைச் சார்ந்துள்ளவனே, கேள்! நீ அவரை உயர்ந் தவர் என மதித்துச் சேர்ந்தாய்; ஆனல், அங்ங்னம் சேர்ந்த உனக்கு, நீ சேர்ந்தவரிடம் உய்ர் பண்பு இல்லே யெனத் தெரிந்தால், அது, ஒருவன், சந்தனம் இருக்கிறது என்று ஒரு செம்பைத் திறந்து உள்ளே பாம்பைக்கண்டது போன்றதாம். - 56 மலேச் சாரலில் பெரு மணிகள் கிடந்து சுடர் விடும் மலே நாடனே, கேள் மக்களது மனம் வேருயுள்ளது, செய்கை யும் வேருபுள்ளது; எனவே, எவர் ஒருவர் இன்ைெருவரது மனத்தைப் புரிந்து கொள்ளும் அறிவுத்துணை உடையவரா யிருக்கமுடியும் ? 57 தண்ணிர் மணிகளைத் தெள்ளியிழுத்துச் சேருய்க் குழப் பிக்கொண் டோடும் பொலிவு மிக்க மலே நாடன்ே உள்ளத் தால் நட்புகொள்ளாமல், நன்மை பெறுவதற்கு ஏற்ற வெளிச்செயல் உடையவராய்க் கள்ளத்தனமாய் நட்புற் றிருப்பவரின் பெரிய நட்பு, மனத்தில் களங்கம் உடைய தாகிப் பின் அழிந்துவிடும். - 58 ஓங்கிய ஒளிவிடும் வாள் தவறித் தம் பகைவர் கையில் அகப்பட்டுக் கொள்ளின், தம் ஊக்கத்தை அழிப்பதும் உண்மையாகும். அதுபோல, கல்லாத தியோரிடம் நட்பு கொளின், அந்நட்பு, இம்மையிலும் மறுமையிலும் தம் வளர்ச்சியைச் சுட்டழிக்கு மாதலால், அன்னரிடமிருந்து பிரிதலே நற்செயலாகும். 59 மனைவியின் பற்றைக் கைவிடாமலும் மக்கள் நன்மைக் கென்று ஏங்கி யுழைத்தும் எத்தனே ஊழிக்காலந்தான் நெஞ்சமே நீ வாழ்வாயோ ? எவ்வளவு சிறியதாயினும் செய்துள்ள நல்லறத்தைத் தவிர, உயிர்க்கு மிகுநன்மை யளிப்பது வேருென்றும் இலது. 60