பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 துறவறவியல் 7. செல்வத்தின் நிலையில்லாமை உப்பு, உறைப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என்னும் ஆறு சுவைகள் கலந்த உணவை மனேவி விரும்பி ஊட்ட, மறு கவளம் வேண்டா என்று தள்ளி முதல் கவளத் தோடு உண்டு எழுந்த செல்வரும், பின்ஒருகால் ஏழை யராகி வேருே.ரிடம் சென்று கூழுக்குக் கெஞ்சுவர் என்ருல், செல்வம் என்னும் ஒன்று நிலையானதாக மதிக்கத்தக்க தன்று என்பது புலப்படும். 61 செல்வமானது நடுவு நிலைமை உடையதாய் எவரிடமும் நிலைத்து நில்லாமல், வண்டியின் உருளைக் கால்போல மேலுங் கீழுமாய் மாறிமாறி வரும்; ஆதலின், குற்றம் அற்ற பெருஞ்செல்வம் கிடைப்பின், கிடைத்த காலந் தொட்டே, எருது நடந்து உழுது உண்டான உணவுப் பொருளைப் பலரோடு சேர்ந்து உண்பீராக ! 62 யானேயின் பிடர் பெருமையுற அதன்மேலுள்ள குடை நிழலின் கீழ்ப் படைத்தலைவராய் அமர்ந்து சென்ற அரச ரும், மாருன திவினே தாக்க, தாம் கைக்கொண்ட மனை வியை மாற்றரசர் கொள்ள விழ்ந்தழிவர். 63 வாழும் நாட்களோ செல்லுகின்றன - செல்லுகின்றன; யமனே, சினந்து விரைந்து வருகிருன்-வருகிருன்; எனவே நிலத்தவை - நிலைத்தவை என்று நினைப்பன வெல்லாம் நிலையாகமாட்டா என்று அறிந்து, உம்மால் இயன்ற . இயன்ற அறங்களைச் செய்வதாயின் உடனே செய்க. 64 யாதானும் ஒரு பொருள் கையில் கிடைத்தால், அதனைப் பிறகு உதவுவோம் என இறுகப்பிடித்து வைத்திராமல் முதலிலேயே பிறர்க்கு உதவியவர்கள், நடுநிலை தவறுதல் இல்லாத கடிய யமன் உயிரைப் பிடித்துச் செல்லும் கொடுநிலத்திலிருந்து தப்பிப் பிழைப்பர். 65