பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 துறவறவியல் 12. உலகப் பற்றைத் துறத்தல் விளக்கு வெளிச்சம் ஏற்பட்டதும் இருள் நீங்கிற்ைபோல, ஒருவனது தவத்தின் முன்னே திவினை நிற்காது. விளக் கின் நெய் தீர்ந்தபோது இருள் சென்று பாய்வதுபோல், ஒருவனது நல்வினை நீங்கியபோது தீவினை நிலைத்து விடும். 11 பொருள்களின் நிலையின்மை, பிணி, முதுமை, இறப்பு ஆகியவற்றை எண்ணி மேலோர் தமக்கேற்ற நல்வினை களைச் செய்வர். எனவே, வேத சாத்திரம், சோதிடம் என் றெல்லாம் பிதற்றுகிற பித்தர்களினும் அறிவிலிகள் இல்லை. 112 வீடு, இளமை, எழுச்சி, அழகு, மேலான புகழ்ச்சொல், செல்வம், வலிமை என்ற இவை யாவும் நிலையற்றவை என மேலோர் மெல்ல ஆய்ந்துணர்ந்து, தாம் பிழைக்கும் வழிதேடி, காலம் தாழ்க்காது துறவுகொள்வர். 113 அறிவிலார், பலநாள் துன்பத்தில் உழல்வதாஞ்லும், ஒருநாள் இன்பத்திற்காக மனைவாழ்வை விரும்புவர், கற்றமைந்த பெரியாரோ, இன்பம் இடையிடையே சிறிதளவு வருவதறிந்தும், துன்பமே மிகுதியானது என்றுணர்ந்தும் மனைவாழ்வைத் துறந்தனர். 114 இளமையும் வீணே கழிந்தது; இதோ இப்போதே நோயுடன் முதுமை வருகிறது. எனவே, என்ைேடு கலவாமல்துணிவுடன் எங்கெங்கோ செல்லும் என் மனமே! இனியாயினும் நமக்கு நல்வழி ஏற்படப் புறப்படுக. 115