பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் 66 15. குடிப்பிறப்பு உடுக்கை உலறி உடம்பழிந்தக் கண்ணும் குடிப்பிறப் பாளர் தம் கொள்கையிற் குன்ருர்; இடுக்கண் தலைவந்தக் கண்ணும் அரிமா கொடிப்புல் கறிக்குமோ மற்று. , , 141 '1 சான்ருண்மை, சாயல், ஒழுக்கம் இவைமூன்றும் வான்தோய் குடிப்பிறந்தார்க் கல்லது-வான்தோயும் மைதவழ் வெற்ப! படாஅ பெருஞ்செல்வம் எய்தியக் கண்ணும் பிறர்க்கு. 142 இருக்கை எழலும் எதிர்செலவும் ஏனே விடுப்ப ஒழிதலோ டின்ன-குடிப்பிறந்தார் குன்ரு ஒழுக்கமாக் கொண்டார்; கயவரோ(டு) ஒன்ரு உணரற்பாற் றன்று. . 143 கல்லவை செய்யின் இயல்பாகும்; தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும்;-எல்லாம் உணரும் குடிப்பிறப்பின் ஊதியம் என்னே புணரும் ஒருவர்க் கெனின். - 144 w a கல்லாமை அச்சம்; கயவர் தொழிலச்சம்; சொல்லாமை உள்ளுமோர் சோர்வச்சம்; எல்லாம் இரப்பார்க்கொன் lயாமை அச்சம்; மரத்தாரிம் மானக் குடிப்பிறந் தார். 145