பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 அரசியல் 17. பெரியவரிடம் பிழைபட நடவாமை ஒலிக்கின்ற அருவி ஒடும் அழகிய மலைநாடனே! குற்ற மற்ற பெரியாரிடத்துங்கூட, பொறுத்துக்கொள்வார்என்று கருதி, வெறுக்கத்தக்க திச்செயல்கள் புரியலாகாது; அவர் வெறுத்துவிடின், அதல்ை ஏற்படும் இழப்பை நீக்குதல் யார்க்கும் இயலாது. - 161 நல்ல நயம் அறியாத அறிவுபெற்ற முடர், பொன்னேயே தரினும் பெறுதற்கரிய பெரியார்ை எளிதே - இலவசமாகச் சேரப்பெற்றுங்கூட, (அவரால் நன்மைபெருமல்) பயனற்ற பொழுதாக நாளைக் கழிப்பர்.அந்தோ! 162 ஒருவருடைய தாழ்வும் உயர்ந்த மதிப்பும் ஆ கிய இரண்டும் மேன்மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டியவை யாம். நயம் இல்லாத-ஒழுக்கமும் அறியாத அற்பமாக்கள் செய்யும் இகழ்ச்சியையும் எடுத்தோதும் புகழ்ச்சியையும், ஆராய்ந்த நூல்வல்லார் ஒரு பொருட்டாக மதியார். 163 படம் விரிக்கும் பளபளப்பான நிறமுடைய நல்ல பாம்பு ஆழமான வெடிப்புக்குள் இருப்பினும், இடியின் கடுமையான சினமுழக்கம் வெகுதொலைவில்தோன்றிலுைம் அஞ்சும். அதுபோல, பிழை செய்தவரைப் பெரியவர் சினந்தால், புகுதற்கரிய் காப்பிடத்தில் (அரணில்) புகுந்து கொள்ளினும் தப்ப முடியாது, ' 164 எம்மைப் பற்றி நீவிர் அறியீர்; எம்மைப்போல் உயர்ந்தவர் எவரும் இல்லை என்று ஒருவர் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்வது உயர்ந்த கோட்பாடாகாது; நல்லறம் அறிந்த பெரியோர், தம்மை அருமையானவர் என்று கருதிப் பெருமைக்கு உரியவர் என்று ஏற்றுக்கொள்வதே ஒருவர்க்கு உயர்வு. 165