பக்கம்:நாலடியார் நயவுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 அரசியல் 20. முயற்சி உடைமை கொள்ளத்தக்க நீரை மிகவும் தன்னிடத்திலேயே வைத்திராம்ல் வெளிவிடும் குளத்தின் கீழ்மட்டத்தில் உள்ள பசுமையான பயிர்போல, முயன்று உழைக்கும் தலைமைத் சுற்றத்தார் கொடுப்பதை உண்டு மற்ற சுற்றத்தார்கள் துன்பின்றி வாழ்வர். வ்ாள் சுழற்றி ஆடும் கூத்தாட்டு மகளிரின் கண் சுழல்வதுபோல் சுழன்று உழைக்கும் அம் முயற்சியாளர்க்குத் தவறிப்போகும் செயலும் -ಣ அசைகின்ற கொம்பாக வழியிலே நின்றிருந்த இளஞ் சிறுமரம், வயிரம் பாய்ந்த பெருமரமான போது யானையை யும் கட்டக்கூடிய தறியாக அமையும். ஒருவன் 'தான் தன்னைத்தாழச்செய்யாது முயன்று வளர்த்துக்கொண்டரல்: அவனது வாழ்வும் அந்த மர்ம்போலவே உறுதிபெறும். 192 வலிய புலி பெரிய இறைச்சி யுணவு கிடைக்காமல் ஒரு நாளைக்குச் சிறிய தேரையையும் பிடித்துத் தின்னும், எனவே, நுமது அறிவை நோக்க, கிடைத்துள்ள தொழில் காலால் செய்யும் அற்பத் தொழில் என்று எண்ணற்க; கைத்திறமையால் செய்யும் மேலான தொழிலும் அங்கே கிடைக்கக் கூடும். 93 தாழையை அலைகள் மோதும் சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடற்கரை நாடனே ! ஒன்று எளிதில் முடியா தாயினும் ஒருவகைத் திறமையுடன் முயன்று முடித்துக் கலங்காது நிற்பதே ஆண்மையாம்! எளிதில் முடியுமானுல் மற்றபடி பெண்களும் செய்து வாழ்வார்களே ! 194 உயர் குலம் என்றும் இழிகுலம் என்றும் சொல்லளவே தவிரப் பொருள் அளவில் ஒன்றுமில்லை. பழம்பெருஞ் சிறப்புடன், நல்ல செல்வம் ஒன்று போதுமா ? தவம், கல்வி, முயற்சி என்ற இவற்றலெல்லாந்தான் உயர்குடிப் பெருமை உளதாகும். 195