பக்கம்:நாலும் இரண்டும்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதமை என்பது லுறு கின்றனரே என்று அவர் உள்ளம் நைந்திருக்கும். இவ்வாறு விளக்கிருக்க மின்மினிக்காக அலையும் - நெல்லி" ருக்க உமி குற்றும் - யானைக் கொம்பிருக்க முயற்கோடு தேடும் மக்களைக் கண்டு வருந்த, அவர்தம் அவல நிலைக்கு. யாது காரணமாகலாம் என அவர் உள்ளம் எண்ணிற்று. அவர் கண்ட முடிவு பேதமையே அம்மக்களைத் திசை மாற்றுகின்றது என்பதுதான். எனவேதான் இங்கே ஆறு அங்கங்களை அடுக்கிச் சொன்ன பிறகு - பேதைமையைப் பற்றிச் சொல்லத் தொடங்குகிருர். இந்த முதற் குறளி' லேயே அதன் கொடுமையை நினைந்த வள்ளுவர், " பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண் டூதியம் போக விடல் ' (831). எனச் சுட்டிக் காட்டுகிருர். இந்த உண்மை இவரைப் 'பொய்யில் புலவர் எனப் போற்றிய சாத்தனர் வாக்கால் நன்கு விளக்கப் பெறுகின்றது. . . பேதமை என்பது யாதென வினவின் ஒதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளால் கண்டது மறந்து முயற்கோடு உண்டெனக் கேட்டது தெளிதல் ' (மணிமேகல). என்பது அவர் வாக்கு. சாத்தனர் சமய நெறிவழி இதைச் சுட்டினலும், ஈண்டு வள்ளுவர் குறளுக்கு ஏற்ற வகை யிலேயே இவ்வடிகள் பொருள் கொண்டு அமைகின்றன. வள்ளுவர் கூறிய அங்கங்களே உற்று உணராது மயக்க முற்று, வள்ளுவர் கூறிய இயற்படு பொருள்வழிக் காண்பதை மறந்து, யாரோ சொல்லிய ஆகாயப் பூ முயற். 49