பக்கம்:நாலும் இரண்டும்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமின் அறநெறி 17–3–16 நாலடியின் ஆசிரியர்கள் உலக நிலையாமையைப் பற்றி அடிக்கடி சுட்டிக் காட்டினலும், இவ்வுலகில் வாழவேண்டிய இன்றியமையாமையினையும் வற்புறுத்தத் தவறவில்லை. அவ்வாறு வாழும் நிலையில் உலகியலே இன்பமாக்க வேண்டிய சில உண்மைகளையும் எடுத்துரைக்கின்றனர். அவற்றுள் ஒன்றே கல்லினஞ் சேர்தல். 'நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும் என்ற ஒளவை மொழிக் கேற்ப, நல்ல-அல்ல லற்ற வாழ்வினை நாம் மேற்கொள்ளவேண்டின் நல்லவர் உறவைக் கொள்ளல் வேண்டுவதாகும். அவ்வுறவினை ஏன் கொள்ளவேண்டு மென்பதையும் கொண்டால் பெறும் பயன் யாது என்பதையும் பலவிடங்களில் வற்புறுத்தும் நாலடியார் ஈண்டும்-இன்றைய பாட்டிலும் சுட்டிக் காட்டத் தவறவில்லை. உலகில் பிறந்தார் அறநெறியே பற்றி வாழக் கடமைப் பட்டவர். ஆம்! அவ்வாறு வாழ்ந்தால் வர இருக்கும் கூற்றுக்கு அவர்கள் அஞ்சி வாழ வேண்டுவதில்லை. அறத்தாறு வாழ்வாரைக் கூற்றுவன் அல்லல் படுத்தமாட்டான் அல்லவா? எனவே அறத்தாறு வாழப் பழக வேண்டும் என்பது உண்மை. ஆனல், எது அறம்? பலவகையில் பலர் சுட்டுவர். இங்கே ஆசிரியர் ஒரிரு அற நெறிகளைச் சுட்டு கிருர். ஆம். அவையே பொறுமை, வஞ்சக மின்மை, தீகட்பு நீங்கல் முதலியன, இவையே நம்மை அறத்தாற்றில் -உய்க்கும் என்பது உண்மை, பொறுமின் பிறர் கடுஞ்சொல் 61