பக்கம்:நாலு பழங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

நாலு பழங்கள்

படும்படி வைத்துக் கொள்ளக் கூடாது." என்று வித்தியாதரர் சொன்னார்.

வருத்தம் உண்டாக இடம் இல்லை. என்னை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் பெண்ணைத் தாருங்கள்; இல்லாவிட்டால் வேண்டாம்" என்றான் அவன்.

வித்தியாதரருக்குச் சுகுமாரனுடைய அழகும் குணமும் பிடித்திருந்தன. வித்தியாவதியை அவனுக்கே மணம் செய்து கொடுத்துவிட்டார்.

வித்தியாவதியும் சுகுமாரனும் மனைவியும் கணவனுமாகக் குடித்தனம் நடத்த ஆரம்பித்தார்கள். அவள் மிகவும் நன்றாகச் சமைத்தாள். சுகுமாரன் மகா புத்திசாலி. ஆகையால் நாளடைவில், தன் மாமனார் சொன்ன விஷயங்களின் உண்மையைத் தெரிந்துகொண்டான்.

ஒரு நாள், "நான் கல்லைப் போட்டுச் சமைப்பேன் என்று என் தகப்பனார் சொன்னாரே; நீங்கள் என்னை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?" என்று வித்தியாவதி தன் கணவனைக் கேட்டாள்.

சுகுமாரன், "உப்புக் கல்லைப் போட்டுச் சமைப்பாய் என்று தெரிந்து கொண்டேன். உப்பில்லாமல் எப்படிச் சமைக்க முடியும்? என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

"சாப்பிட்டால் ஆதார வஸ்துவை எறிந்து விடுவது உங்களுக்குச் சம்மதந்தானா?" என்றாள் வித்தியாவதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/42&oldid=1084879" இலிருந்து மீள்விக்கப்பட்டது