பக்கம்:நாலு பழங்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

நாலு பழங்கள்

அரண்மனைக்குப் போகும் சாலையில் அரண்மனைக்குச் சிறிது தூரத்தில் பரந்த வெளியாக இருந்த இடத்தில் ஒருபகுதியை விலைக்கு வாங்கினார். அங்கே ஒரு சிறிய கட்டிடம் கட்டிக் கொண்டார். நாற்காலி, மேஜை, டோனா, பென்சில், மைக்கூடு, காகிதங்கள், குறிப்புப் புத்தகங்கள் முதலிய உபகரணங்களெல்லாம் தம் கைப் பொருளைச் செலவு செய்து வாங்கி நிரப்பி, அதைத் தம்முடைய உத்தி யோகசாலையாக ஆக்கிக் கொண்டார். நல்ல நாளில் நல்ல வேளையில் சம்பளமில்லாத அந்த உத்தியோகத்தைப் பார்க்கத் தொடங்கினார். சம்பளம் இல்லாவிட்டால் என்ன? அவருக்குப் பணம் இல்லையா? உத்தியோகம் செய்கிறோம் என்ற உற்சாகமும், சோம்பேறியாகப் பொழுதைப் போக்காமல் சுறுசுறுப்பாக இருக்கிறோம் என்ற திருப்தியுமே அவருக்கு ஊதியமாயின.

தினந்தோறும் காலையில் எட்டு மணிக்கு அவர் நல்ல உடைகளை அணிந்து கொண்டு போய்விடுவார். உணவு கொள்ள வேண்டிய வேளைகளில் வீட்டுக்குப் போய் வருவார். இல்லையானால் அந்த இடத்திற்கே உண்வை வருவித்துக் கொள்வார். இரவு எட்டு ஒன்பது மணி வரையில் தம் 'உத்தியோக' த்தை பார்ப்பார். பிறகு காரியாலயத்தைப் பூட்டிக் கொண்டு போய்விடுவார். சில நாட்கள் உற்சாக மிகுதியில் இரவு நேரங்களிலும் அங்கே தங்கிவிடுவது. உண்டு.

அது என்ன உத்தியோகம்? சரியானபடி வேலை வாங்கும் உத்தியோகந்தான். சோம்பலில்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/48&oldid=1084992" இலிருந்து மீள்விக்கப்பட்டது