பக்கம்:நாலு பழங்கள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசகுமாரன் சோதனை

51

குழம்பு பண்ணினாள். பாண்டியனுக்கு மாலையிடும் வேப்பம் பூவால் ரசம் பண்ணியிருந்தாள்.

அரசகுமாரன் சாப்பிடும் போது. ரசத்தை அவள் மீது துப்பினான். அவள் கோபம் கொள்ளாமல் பரிமாறினாள். சோற்றை வாரி இறைத்தான். அவள் அப்போதும் கோபம் கொள்ளவில்லை. அவள் பொறுமைசாலி என்பதை அப்போது உணர்ந்து கொண்டான்.

"நான் போய் வருகிறேன்" என்று சொல்லிப் புறப்பட்டுச் சென்றான், அரசகுமாரன், பிறகு சில உறவினர்களுடன் வந்து அமுதவல்லியைக் கல்யாணம் செய்து கொண்டான். அப்போதும் தான் ராஜகுமாரன் என்று அவன் சொல்லவில்லை. திருமணம் முடிந்தவுடன் அவளை அங்கேயே விட்டு விட்டுப் போனான்.

ஒரு நாள் நாலைந்து சேவகர்களை அமுதவல்லியிடம் அனுப்பி, "இந்த நாட்டு ராஜகுமாரன் உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான்" என்று சொல்லச் சொன்னான். அவள், "நான் முன்பே கல்யாணம் ஆனவள்" என்றாள்.

"ஆனாலும் குற்றம் இல்லை; உன் அழகைக் கண்டு அவர் ஆசைப்படுகிறார். ஆடை ஆபரணம் எல்லாம் நிறையத் தருவார்" என்றார்கள்.

அவள் முதலில் சாந்தமாக மறுத்தாள். வரவர அவர்கள் அதிக ஆசை காட்டினார்கள். அவள் புலி போலச் சீறி விழுந்தாள். கடைசியில் சேவகர்கள் அவளைக் கயிற்றினால் கட்டிக்கொண்டு போனார்கள்.

ராஜகுமாரன் மாணிக்கக் கிரீடமும் பொன்னா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாலு_பழங்கள்.pdf/57&oldid=1085004" இலிருந்து மீள்விக்கப்பட்டது