பக்கம்:நாள் மலர்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை மாகாணத் தமிழாசிரியர் மூன்றாவது 5 நாட்டுக்கு அனுப்பிய வாழ்த்து! தமிழா சிரியர் மாநாடு வாழ்க! தகுமவர் நோக்கங்கள் வெல்க! அமுதே நிகர்த்த தீந்தமிழ் தன்னை இளைஞருக் கருத்துவார் தம்மை நமதா ளவந்தார் மதிப்பதே இல்லை நன்றான ஒற்றுமை பெற்றே "எமதா ணையேற்பீர் ஆளவந்தாரே இல்லையேல் வீழ்விரெ”ன் நுரைக்க. உரிய தாய்மொழி மக்களுக் கீவோர் நாட்டினுக் குயிரினை ஒப்பார் அரிய நற்செயல் செய்பவர் மக்கட் கறிவினை யூட்டுவா ராவார். பிரித லின்றி ஆசிரியர்கள் ஒற்றுமைப் பேற்றினை எய்திப் பெரியர் என்று தாம்சுமை என்னும் பிற்போக் காளரை வீழ்த்த! தமிழர் நாட்டைத் தமிழரே ஆன்க தமிழரால் வணங்கிடத் தக்கோர் தமிழாசிரியரே! இந்நிலை இந்நாள் தளரினும், தழைத்திடும் நாளை! இமய வெற்பில் தம்பெயர் பொறித்த இனத்தர் நாமென உணர்க! அமைதி மாய்க்கும் வடவர்தம், பிடி அகலுக நாளும்வா ழியவே. 19 குயில் 1-6-48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/21&oldid=1524964" இலிருந்து மீள்விக்கப்பட்டது