பக்கம்:நாள் மலர்கள்.pdf/29

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

காமராசர்க்கு அஞ்சல்

காமராசரே! ஒரு காமாட்டி

உங்களிடத்தில் ஒவ்வொரு நாளும்

வந்து மக்கட்குச் சிபார்சு கேட்பான்;

அதற்கு அவரிடத்தில் ஐந்நூறு ஆயிரம்

வாங்கிக் கொள்வான். அது மட்டுமன்று!

பெரியார் கேட்பதாய்ப் பெரிய தொகையும்

உங்களைக் கேட்பான். ஒரு தொகை கொடுத்தால்

அவனே, அவுக் கென்று வாயிற் போட்டுக்

கொள்வான். அப்பயல் பெரிய கள்வன்!


எப்படி யாவது போகட்டும் என்றால்

பெரியார் கட்சிக்குப் பெரிய தீமை

ஏற்படு கின்றதே! எப்படி என்றால்,

அவனுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு

செல்வாக் கினையும் தீய வழியில்

செலவிடு கின்றான்! கலகக் காரன்.


இயக்கந் தன்னில் இருக்கும் பொறுக்கிப்

பசங்களை யெல்லாம் தன்பக் கத்திற்கு

இழுத்துக் கொண்டே இருக்கின்றானே!

வேறு கட்சியை அமைக்க விரும்பினான்?

அன்றொரு குள்ளன் எப்படி? அப்படி!


அமைச்சரே அவனுக்கு நீங்கள் அளிக்கும்

ஒவ்வொரு சலுகையும் இயக்க உடம்பின்

ஒவ்வோர் உறுப்பையும் அறுப்ப தாகும்.

உலகினர் உள்ளம் எல்லாம் கவர்ந்த

27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாள்_மலர்கள்.pdf/29&oldid=1524834" இலிருந்து மீள்விக்கப்பட்டது