பக்கம்:நாவல் பழம்.pdf/12

இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

'ஆஸ்திக்கு ஒரு ஆண்பிள்ளை. ஆசைக்கு ஒரு பெண் பிள்ளை' என்பது பழமொழி. அதிகச் செலவு செய்து ஆஸ்தியை அழிக்க ஒரு ஆண்பிள்ளை. யாரையாவது காதலித்துப் பெற்றேரின் ஆசையை அழிக்க ஒரு பெண் பிள்ளை' இது புதிய வாழ்க்கை வழி. ஆனல் நான் ஒரே பிள்ளை, எங்கள் உறவினர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலம்...பெரியவர்கள் கிணற்றின் பாடலைப் போல வெளிவரும் இறவைச் சத்தத்தில் வேர்வை சிந்தி வயல்வெளியில் உழைத்துவிட்டு வீட்டுக்கு வருவார்கள். மொத்தமாக இலைபோட்டு உட்கார வைத்து எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு படைக்கும் தாயைப் போல பூமித்தாயின் ஒவ்வொரு இடமாக மாறி மாறி வீட்டின் முன்னிடம் முழுவதும் நனையும் வரை ஒடிக் கொண்டே குளிப்பார்கள். அந்த இரவு நேரங்கள் மிகமிக இனிமையானவை. அதுவும் நிலாக்காலத்து இரவென்ருல் எங்களுக்கு இரட்டைச் சந்தோஷம். - அல்வாவைப்போலக் கிண்டப்பட்ட கேழ்வ்ரகுக் களி வடைச்சட்டியில் முறுகலான மனத்தோடு வரும் "குச்சிக்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/12&oldid=1638363" இலிருந்து மீள்விக்கப்பட்டது