பக்கம்:நாவுக்கரசர்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (1) 59

தூங்கானை மாடத் தெம்பெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு நெல்வாயில் அரத்துறை என்ற திருத் தலத்தை அடைகின்றார். ‘கடவுளை’ (5:8) என்ற முதற் குறிப்பினையுடைய திருநேரிசைப் பதிகம் பாடி அரத்துறை இறைவனைப் போற்றுகின்றார்.

கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை விரும்பொப்பானை விண்ணோரும் அறிகிலா அரும்பொப் பானை அரத்துறை மேவிய சுரும்பொப் பானைக் கண்டீர் நாம் தொழுவதே. (2) என்பது இத் திருப்பதிகத்தின் இரண்டாவது பாடல்.

நெல்வாயில் அரத்துறை ஈசனிடம் விடை பெற்றுக் கொண்டு முதுகுன்றம் வருகின்றார் வாகீசப் பெருமான்.

6. நெல்வாயில் அரத்துறை: பெண்ணாடம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 4 கில் தெர் லைவு, நிவா என்னும் வெள் ளாற்றங் கரையிலுள்ளது. சம்பந்தருக்கு முத்துச் சிவிகை, குடைசின்னங்கள் சிவபெருமானால் தரப்பெற்ற அற்புதத் தலம்.

7. முதுகுன்றம் (விருத்தாசலம்): விருத்தாசலம் டவுன் ரோடு என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. கோயில் சில அடிகளே உயரமுள்ள கற்பாறை யின் மீதுள்ளது. இதற்கே பழமலை (விருத்தாசலம்) என்று பெயர். தல விநாயகர் (ஆழத்துப் பிள்ளையார்) பலபடிகள் இறங்கிச் சென்று சேரும் பள்ளமான இடத்தி லுள்ளார். இங்கிருந்து தண்ணிர் வெளியே செல்ல வழி உள்ளது. திருக்கோயிலுக்கெதிரே மணிமுத்தாறு. சுந்தரர் இத்தலத்தில் பதிகம்பர்டி 12000 பொன்பெற்று இந்த ஆற்றி லிட்டு ஆரூர்க் குளத்தில் எடுத்தார். காசியில் இறந்தால் முக்தி என்பதுபோல், இத் தலத்தில் இறத்தாலும் சாரூப முக்தி கிடைக்கும் என்று கந்தபுராணம் கூறுகின்றது (வழி நடைப் படலம் காண்க.) துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் முதலிய பெரியோர்கள் இத்தலத்தில் பெரிதும் ஈடுபட்டவர்கள். மாசி மகத் திருவிழாவின் 6- ஆம் நாள் பகலில் நடைபெறும் இடப உற்சவம் புகழ்பெற்றது. காசியிலும் வீசம்பெரியத்ால் விருத்தகாசி என்று இத்தலம் கூறப் பெறுவதுண்டு. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/102&oldid=634090" இலிருந்து மீள்விக்கப்பட்டது