பக்கம்:நாவுக்கரசர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (1) 65

மழலை தான்வரச் சொல்தெரி கின்றிலள் குழலின் கேர்மொழி கூறிய கேண்மினோ அழக னேகழிப் பாலைனம் அண்ணலே இகழ்வ தோன்னை ஏன்றுகொள் என்னுமே.(3)

என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல். ‘ஊனுடுத்தி ஒன்பது வாசல்” (6-12) என்று தொடங்கும் தாண்டகப்

பதிகத்தில்,

விண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும் எண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்

இறையானாய் எம்மிறையே என்று கிற்கும் கண்ணானாய் காரானாய் யாரும் ஆனாய்

கழிப்பாலை யுள்ளு றையும் கபாலப்பனார் மண்ணாய மாயக் குரம்பை நீங்க

வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே(5)

என்பது ஐந்தாவது தாண்டகம். கழிப்பாலையில் சில நாட்கள் தங்கியிருந்து மீண்டும் ‘பனைக்கை மும்மத வேழம்’ (5.2) என்ற குறுந்தொகைப் பதிகத்தைப் பாடிக் கொண்டு தில்லை மூதூர் வந்தடைகின்றார். இதில்,

13. கோயில் (சிதம்பரம்) வைணவர்கள் திருவரங் கத்தைக் கோயில், பெரிய கோயில் என்று வழங்குவதுபோல் சைவர்கள் சிதம்பரத்தைக் கோயில் என்று வழங்குவர். இது பழங்காலத்தில் தில்லைவனமாக இருந்தது. புலிக்கால் முனிவர் (வியாக்கிரக பாதர்) இவ்வனத்தில் தவம் செய்து சிவபூசை செய்த இடம். இரணியவர்மன் காலத்தில் கோயில் கட்டப் பெற்றது. இக்கோயிலில் (1) சிற்றம்பலம் (சிற்சபை) (2) கனகசபை (பொன்னம்பலம்) (3) நிருத்த சபை (4) தேவசபை (பேரம்பலம்) (5) இராஜ சபை (ஆயிரங்கால் மண்டபம்) என்ற ஐந்து சபைகள் உண்டு. இத்தலம் பல வரலாற்றுச் சிறப்புகளையுடையது.

gm5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/108&oldid=634096" இலிருந்து மீள்விக்கப்பட்டது