பக்கம்:நாவுக்கரசர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (1) 67

திருக்கோயிலினுட் புகுந்து அரியானை’ (6.1) என்று தொடங்கும் பெரிய திருத்தாண்டகப் பதிகம் பாடி இறைவனை இறைஞ்சுகின்றார். இதில்,

முற்றாத பால்மதியம் சூடி ன்ானை

மூவுலகுந் தானாய முதல்வன் தன்னைச் செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத்

திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைத் குற்றாலத் தமர்ந்துறையும் குழகன் தன்னைக் கூத்தாட வல்லானைக் கோனை ஞானம் பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.(9) என்பது இப்பதிகத்தின் ஒன்பதாம் பாடல்.

இதற்கடுத்து ‘செஞ்சறைக் கற்றை'(4.22) என்ற முதற் குறிப்பையுடைய திருநேரிசைச் செந்தமிழ் மாலையால் தில்லைக் கூத்தனை வழுத்துகின்றார்.

விருத்தனாய்ப் பால னாகி

விரிநிலா எரிக்கும் சென்னி திருத்தனார் திருத்தம் செய்ய

tண்டபுன் சடைகள் தாழக் கருத்தனார் தில்லை தன்னுட்

கருதும் சிற் றம்ப லத்தே அருத்தமா மேனி தன்னோ(டு)

அனல்எரி ஆடு மாறே. (9) என்பது இப்பதிகத்தின் ஒன்பதாம் பாடல். சிவபெருமான் திங்களைத் தன் திருமுடியில் சூடியிருப்பதை முதல் பத்துப் பாடல்களிலும் எரியாடுதலை எல்லாப் பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளதைக் கண்டு மகிழலாம்.

இதனை அடுத்து ‘பாளையுடைக் கழுகோங்கி’ (4.80) என்ற திருவிருத்தச் செந்தமிழ் மாலையால் வழிபாடு தொடர்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/110&oldid=634099" இலிருந்து மீள்விக்கப்பட்டது