பக்கம்:நாவுக்கரசர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 நாவுக்கரசர்

படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவில் கடையார் கொடுநெடு மாடங்கள்

ஓங்கும் கழுமலமாம் மடைவாய்க் குருகினம் பாளை

விரிதொறும் வண்டினங்கள் பெடைவாய் மதுவுண்டு பேரா

திருக்கும் பெரும்பதியே.(1)

இந்த ஒரு பாடலைத் தவிர வேறுபாடல்கள் கிடைத்தில. சிவனது பெரும்பதி கழுமலம் என்பது பாடற்கருத்து.

இதனை யடுத்து - “மாதியன்று’ (5.45) என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகம் பாடுகின்றார்.

பண்ணி நேர்மொழி யாள்பலி யிட்டஇப் பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது சுண்ண மாடிய தோணி புரத்துறை அண்ண லாருக்குச் சால அழகிதே, (5)

என்பது ஐந்தாவது பாடல். இது தாய்ப் பாசுரம், ஒரு தாய் தன் மகள் சிவபெருமான்மீது கொண்ட காதலைப்பற்றிக் கூறுவதுபோல் இத் திருப்பதிகப் பாடல்கள் அமைந்துள்ளன.

இங்கனம் பாடி முடித்த பிறகு அப்பர் பெருமான் காழிப் பிள்ளையாரது திருமடத்தில் எழுந்தருளி அவர் அன்புடன் அளித்த விருந்தமுதுண்டு அவருடன் அளவளாவி இருக்கின்றார்.

இவ்வாறு நாவுக்கரசர் பெருமான் சீகாழிப் பதியில் தங்கிச் சிவபெருமானைப் போற்றி மகிழ்கின்றார்: ஒருநாள் நாவுக்கரசர் சோழ நாட்டிலுள்ள சிவத்தலங்கள் எல்லா வற்றையும் வழிபட வேண்டுமென்னும் தமது பெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/117&oldid=634106" இலிருந்து மீள்விக்கப்பட்டது