பக்கம்:நாவுக்கரசர்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) $3

மாலை அகப்பொருள் துறையிலமைந்தது. திருவலம்புரப் பெருமான் திருவீதியில் திருவுலாப் போந்தபோது அவர்பால் காதல் கொண்டு அவர் பின்னே சென்று அவரை அடைய இயலாது வருந்தும் ஒரு தலைவியின் கூற்றாக அமைந் துள்ளது.

பட்டுடுத்துப் பவளம்போல் மேனி யெல்லாம்

பசுஞ்சாக்தம் கொண்டணிந்து பாதம் நோவ இட்டெடுத்து நடமாடி இங்கே வந்தார்க்

கெவ்வூரீர்? எம்பெருமான் என்றேன்; ஆவி விட்டிடுமா றதுசெய்து விரைந்து நோக்கி

வேறோர் பதிபுகப் போவார் போல வட்டணைகள் படகடந்து மாயம் பேசி

வலம்புரமே புக்கங்கே மன்னி னாரே, (6)

என்பது இப்பதிகத்தில் ஆறாவது வாடாத தமிழ் மணம் கமழும் நறுமலர். பட்டுடுத்துப் பவளம் போன்ற மேனி யில் பசும் சாந்தம் அணிந்து பாதம் நோவ நடந்து வந்த அவரை எவ்வூர்?’ என்று நான்வினவினேன். அவரோ என் ஆவி அழியுமாறு செய்து விரைந்து என்னை நோக்கிவிட்டு, வேறோர் பதி புகுவார்போலக் காட்டி, வட்டணைகள் பட நடந்து,19 மாய வார்த்தைகள் பேசி வலம்புரத்தினுட் செனறு மன்னினார்’ என்று சொல்லித் தலைவி வருந்து கின்றாள். அகப்பொருட் சுவையும் கற்பனைப் பாவனையும் கலந்த அற்புதமான இப்பதிகம் பன்முறை படித்து அதுப விக்கத் தக்கது. -

10. அப்பர் பெருமானின் இப்பாடலை மனத்திற் கொண்டு சிற்பியொருவன் வடித்த கவின்மிகு சிலை யொறு வட்டணை காட்டவந்த நாயகர் என்னும் பெயரில் இன்றும் திருவலம்புரத்தில் திகழ்வதைக் காண y IT L0 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/126&oldid=634116" இலிருந்து மீள்விக்கப்பட்டது