பக்கம்:நாவுக்கரசர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு () 85

அடுத்தது வானத்திளமதி (6.82) என்ற திரு நெடுந் தாண்டகச் செந்தமிழ் மாலை.

வானத் திளமதியும் பாம்பும் தம்மில்

வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலும் தேனும் திளைத்துண்டு வண்டு பாடுக்

தில்லை நடமாடுக் தேவர் போலும் ஞானத்தின் ஒண்சுடராய் நின்றார் போலும்

நன்மையும் தீமையும் ஆனார் போலும் தேனொத் தடியார்க் கினியார் போலும்

திருச்சாய்க்காட் டினிதுறையும் செல்வர் தாமே. (1)

என்பது இந்த மாலையின் வாடாத முதல் நறுமலர்; தனி மலர். இப்பதிகப் பாடல்கள் யாவும் படித்து அநுபவிக்கத் தக்கவை.

சாய்க்காட்டு இறைவனிடம் விடைபெற்றுக்கொண்டு திருவெண்காடு’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் திருநாவுக்கரசர். இரண்டு திருப்பதிகங்களால் வெண்காட்டி டிறைவனை வழிபடுகின்றார். பண்காட்டி (4.49) என்ற முதற் குறிப்பையுடைய திருக்குறுந்தொகைப் பதிகத்தில்,

12. வெண்காடு (திருவெண்காடு): சீகாழியிலிருந்து 7 கல் தொலைவு. இங்குள்ள (கோயிலுக்குள்) சூரிய சந்திர அக்கினி என்ற முக்குள நீராடி இறைவனை வழிபடுவோர் மக்கட் பேறுடன் வேண்டிய வரமெலாம் பெறுவர். இவ்வாறு வழிபட்ட அச்சுத களப்பாளர் மெய் கண்டார் என்னும் சந்தான குரவரைப் பெற்றெடுத்தார். இங்கு முக்குள் நீராடித்தென்புலத்தார் வழிபாடும் செய்கின்றனர். கயைக் கோயிலில் உள்ளதுபோலவே இங்கும் அட்சய வடம்’ எனும் அழியா ஆலமரமும் உள்ளது. திருவெண் காடர் என்ற பெயருள்ள பட்டினத்தடிகள் வரலாற்றுத் தொடர்பும் இத்தலத்திற்குண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/128&oldid=634118" இலிருந்து மீள்விக்கப்பட்டது