பக்கம்:நாவுக்கரசர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 நாவுக்கரசர்

ஊனோக் கும்இன்பம் வேண்டி உழலாதே வானோக் கும்வழி யாவது கின்மினோ தானோக் குங்தன் னடியவர் நாவினில் தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே, (3)

என்பது மூன்றாவது பாடல். உடல் நோக்கிய இன்பங் களுக்காக உழலாதே; வானோக்கும் வழிக்கு முயல்க’ என்று தம் நெஞ்சைத் தெருட்டுகின்றார் அடிகள்.

துண்டு சுடர்மேனி (6.35) என்ற செந்தமிழ்த் திருத் தாண்டக மாலை, காதல் மிகுந்த தலைவியொருத்தியின் பேச்சுப் பாவனையில் பாடப்பெற்றது. சமயக் கருத்து களைக் கன்னற் சாறாகக் கவிதையில் தேக்கிய அற்புதத் திருப்பதிகம்.

நென்னலையோர் ஒடேந்திப் பிச்சைக் கென்று

வந்தார்க்கு வந்தேனன் றில்லே புக்கேன் அந்நிலையே நிற்கின்றார் ஐயங் கொள்ளார்

அருகே வருவார்போல் நோக்கு கின்றார் ‘நுங்கிலைமை யேதோ? நும்மூர்தான் ஏதோ?

என்றேனுக் கொன்றாகச் சொல்ல மாட்டார் மென்முலையார் கூடி விரும்பி யாடும்

வெண்காடு மேவிய விகிர்த னாரே. (3) என்பது இப்பதிகத்தின் மூன்றாவது பாடல். ஒடேந்தி நேற்றுப் பிச்சைக்கு வந்தவனை ஊரேது?’ என்றேன்; அருகே வந்தவன் ஒன்றும் சொல்லவில்லை’ என்கின்றாள். இப்பதிகப் பாடல்கள் யாவும் பன்முறை படித்து அதுப விக்கத் தக்கவை. சிவபோகத்தின் சாரங்கள் பாடல்களில் சிந்துவதைக் காணலாம். பிச்சாண்டிக் கோல நலமும் அவன் பின்னே செல்லும் பேதை மனமும் அற்புதமாகச் சித்திரிக்கப் பெறுகின்றன.

காவிரியாற்றங்கரைத் தலங்கள் : இதன் பின்னர் காவிரி யாற்றின் இருகரையிலும் உள்ள தலங்களைச் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/129&oldid=634119" இலிருந்து மீள்விக்கப்பட்டது