பக்கம்:நாவுக்கரசர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 9;

கோடிக்கா குழகனிடம் விடைபெற்றுக்கொண்டு திருக்கோழம்பம்’ என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். ‘வேழம்பத்தைவர் (5.64) என்ற முதற் குறிப்புடைய திருக் குறுந்தொகைப் பதிகத்தால் இத்தலத்து ஈசனைச் சேவிக் கின்றார். இதில்,

முன்னை நான்செய்த பாவம் முதலறப்

பின்னை நான்பெரி தும்மருள் பெற்றதும்

அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர்

பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே (7) ஏழாவது பாடல். அப்பர் பெருமானின் குறுந்தொகைகளில் இஃதொரு இனிய குறுந்தொகை. பாடிப் பயன்பெற வேண் -:1.

கோழம்பக் கூத்தனிடம் விடை பெற்றுக்கொண்டு ஆவடுதுறைக்கு வருகின்றார். இந்தச் சுற்றில் இத்தலத்து ஈசனை நாவுக்கரசர் நான்கு திருப்பதிகங்களால் வழிபடு கின்றார். நம்பனை நல்வேத (6.46) என்ற திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையில்,

ஒருமணியை உலகுக்கோர் உறுதி தன்னை

உதயத்தின் உச்சியை உருமா னானைப்

பருமணியைப் பாலோ டஞ்சாடி னானைப்

பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்

27. கோழம்பம்: நாரசிங்கம் பேட்டை இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. காவிரியின் தென் கரைத் தலம். தென்குரங்காடுதுறை போன்ற தலங்களைச் சேவித்து வரும்போதுதான் இங்கு வந்திருப்பர். ஆவடுதண் துற்ை நோக்கிய திருப்பயணத்தில் இது பாடப்பெற்றி ருக்கும் (தருமபுரப் பதிப்பு) -

28. ஆவடுதுறை (திருவாவடுதுறை): நாரசிங்கம் பேட்டையிலிருந்து கல் தொலைவு. கும்பகோணத்தி

நா-7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/140&oldid=634132" இலிருந்து மீள்விக்கப்பட்டது