பக்கம்:நாவுக்கரசர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 நாவுக்கரசர்

திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்

தீங்கரும்பின் இன்சுவையைத் திகழுஞ் சோதி அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய

அரனடியே அடிநாயேன் அடைந்துய்க் தேனே.(3) என்பது ஐந்தாவது பாசுரம். ‘நிறைக்க வாலியள். (5.29) என்ற திருக் குறுந்தொகைப் பதிகத்தின்,

குழலும் கொன்றையும் கூவிள மத்தமும் தழலும் தையலோர் பாகமாத் தாங்கினான் அழகன் ஆவடு தண்டுறை யாவெனக் கழலும் கைவளை காரிகை யாளுக்கே. (6) என்பது ஆறாவது பாடல். இது தாய்ப் பாசுரமாக அமைந்துள்ளது. ஆவடு தண் துறையார்மீது காதல் கொண்ட தன் மகள் நிலையைத் தாய் விவரிப்பதாக நடை பெறுகின்றது இப்பதிகம்.

அடுத்து மஞ்சனே மணி’ (4.57) என்ற திருநேரிசைப் பதிகத்தால் வழிபடுகின்றார் வாகீசப் பெருமான். இதில்,

செறிவிலேன் சிங்தை யுள்ளே

சிவனடி தெரிய மாட்டேன்; குறியிலேன்; குணமொன் றில்லேன்;

கூறுமா கூற மாட்டேன்; நெறிபடு மதியொன் றில்லேன்;

கினையுமா கினைய மாட்டேன்; அறிவிலேன்; அயர்த்துப் போனேன்;

ஆவடு துறையு ளானே. (7) என்பது ஏழாவது திருப்பாடல்.

லிருந்து பேருந்து வசதி உண்டு. திருமூலநாயனார் திருமந்திரம் அருளிய தலம். சம்பந்தர் தமது தந்தையார் வேள்வி செய்தற் பொருட்டு இறைவனைப்பாடி 1000 பொன் பெற்று அதைக் கொடுத்த பாசுரம் (4.56:1) கூறும். திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவிர் தொடர்பும் இத் தலத்துக்கு உண்டு. திருவாவடுதுறை ஆதீனத் தலைமைத் திருமடம் இங்குள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/141&oldid=634133" இலிருந்து மீள்விக்கப்பட்டது