பக்கம்:நாவுக்கரசர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 101

மனத்துள் மாயனை மாசறு சோதியைப் புனிற்றுப் பிள்ளை வெள்ளையம் மதிசூடியை எனக்குத் தாயை எம்மானிடை மருதனை கினைத்திட் டுறி நிறைந்ததென் உள்ளமே. (2)

என்பது இரண்டாவது பாடல்.

‘சூலப்படையுடையார்’ (6.18) என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தில்,

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்

விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும் பூதங்க ளாய புராணர் போலும்

புகழ்வளர் ஒளியாய் கின்றார் போலும் பாதம் பரவப் படுவார் போலும்

பத்தர்களுக் கின்பம் பயந்தார் போலும் ஏதங்க ளான கடிவார் போலும்

இடைமருது மேவிய ஈச னாரே. (3)

என்பது மூன்றாவது தாண்டகம், ‘ஆறுசடைக் க்னிவர்” (6.17) என்ற திருத்தாண்டகப் பதிகமும் இடைமருதுமேவி இடங்கொண்ட ஈசனைப் போற்றுவதே.

பச்சை நிறமுடையர் பாலர் சாலப்

பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர் கச்சைக் கதநாகம் பூண்ட தோளர் -

கலனொன்று கையேந்தி இல்லம் தோறும் பிச்சைக் கொளநுகர்வர் பெரியர் சாலப்

பிறங்கு சடைமுடியர் பேணுங் தொண்டர் இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்

இடைமருது மேவி இடம்கொண் டாரே (7)

என்பது இப்பதிகத்தின் ஏழாவது தாண்டகம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/144&oldid=634136" இலிருந்து மீள்விக்கப்பட்டது