பக்கம்:நாவுக்கரசர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) 168

துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத்

தோத்திரங்கள் பலசொல்லி வானோர் ஏத்த நிறைந்தானை நீர்நிலந்தி வெளிகாற் றாகி

நிற்பனவும் நடப்பனவும் ஆயி னானை மறந்தானைத் தன்கினையா வஞ்சர் தம்மை

அஞ்செழுத்தும் வாய்கவில வல்லோர்க் கென்றும் சிறந்தானைத் திருநாகேச் சரத்துளானைச்

சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே. (6) என்பது ஆறாவது திருத்தாண்டகம்.

நாகேச்சரத்து நம்பெருமானிடம் விடைபெற்றுக்

கொண்டு திருச்சத்திமுற்றத்தைச் சென்றடைகின்றார். ‘கோவாய் முடுகியடு'(4.96) என்ற திருப்பதிகத்தில்,

கோவாய் முடுகி யடுதிறற்

கூற்றம் குமைப்ப தன்முன் பூவா ரடிச்சுவடு என்மேல் -

பொறித்துவை போக விடில் மூவா முழுப்பழி மூடுங்

கண்டாய் முழங்கும் தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் -

துறையும் சிவக்கொழுந்தே. (1)

என்பது இப்பதிகத்தின் முதற் பாடல். இதில் எம் பெருமானே, கொல்லுந் தொழிலையுடைய கூற்றுவன் என் உயிரை இவ்வுடம்பினின்று பிரித்து வருத்துவதற்கு முன்னமே நின்னுடைய செந்தாமரை போலும் அழகிய திருவடிகளை என் சென்னி மீது சூட்டியருள்வாயாக’

32. ச த் தி மு ற் ற ம் : தாராசுரத்திலிருந்து 2 கல் : முத்தமிட்ட தலம். இத்தலத்தில் திருவடி தீட்சை விண்ணப்பித்த அப்பர் பெருமானுக்கு அது நல்லூரில் கிடைத்தது.பாடலில் சத்தி முற்றம்’ என்று வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/146&oldid=634138" இலிருந்து மீள்விக்கப்பட்டது