பக்கம்:நாவுக்கரசர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நாவுக்கரசர்

என்பது ஆறாவது பாடல். நல்லூரில் உள்ள சிவபெருமான் தொண்டர் கண்களில் அகப்படான். ஆற்றில் பொருளைத் தவறவிட்டுக் குளத்தில் தேடும் ஆதரைப்போல், உலகெல் லாம் திரிவர்” என்கின்றார்.

காட்கொண்ட தாமரைப் பூத்தடஞ்

சூழ்ந்த கல்லூரகத்தே கீட்கொண்ட கோவணம் காவென்று

சொல்லிக் கிறி படத்தான் வாட்கொண்ட நோக்கி மனைவியொடும்

அங்கோர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்

றோஇவ் அகலிடமே. (1) என்பது ஏழாவது பாடல். கோவணத்தைக் காத்துத் தா என்று சொல்லி வஞ்சனையால் ஒரு வாணிகனை மனைவி யொடும் ஆட்கொண்ட இடம் அன்றோ இவ்வூர்?’ என்று சொல்லுகின்றாள் தோழியிடம், வாணிகனை (அமர்நீதி நாயனாரை) ஏமாற்றியதுபோல் நம்மையும் ஏமாற்றுவர்” என்பது குறிப்பு.

சில நாட்கள் நல்லூரிலேயே தங்கிக் கைத்தொண்டு செய்து வருகின்றார். இந்நாட்களில் மேலும் சில திருத்தல வழிபாட்டைத் தொடர எண்ணிக் கருகாவூர்.38 என்ற திருத் தலத்திற்கு வருகின்றார். குருகாம் வயிரமாம் (6.18) என்ற திருத்தாண்டகப் பதிகத்தால் கருகாவூர் எந்தையைப் போற்றி மகிழ்கின்றார். - -

வித்தாம் முளையாகும் வேரே தானாம்

வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியார்க்கோர் பாங்கனு மாம்பால்

நிறமு மாம்பரஞ் சோதி தானாம்

36. கருகாவூர் (திருக்களாவூர்): மயிலாடுதுறை-தஞ்சா வூர் இருப்பூர்திப் பர்தையில் உள்ள பாபநாசம் என்ற நிலை யத்திலிருந்து 4 கல் தொலைவில் உள்ளது. இக்காலத்தில் பேருந்து வசதிகள் ஏற்பட்டிருக்கலாம், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/149&oldid=634141" இலிருந்து மீள்விக்கப்பட்டது