பக்கம்:நாவுக்கரசர்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தல வழிபாடு - (2) i07

தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்

தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே கின்ற கத்தாம் அடியேற்குக் காணா காட்டும்

கண்ணாம் கருகாவூர் எந்தை தானே. (2) என்பது இரண்டாவது திருத்தாண்டகம். அடுத்து ஆவூர்’ வருகின்றார். அவ்வூர் இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை).

ஆவூர்ப் பசுபதீஸ்வரரிடமிருந்து வி ைட பெற் றுக் கொண்டு பாலைத்துறை என்ற திருத்தலத்திற்கு வரு கின்றார். லேமாமணி கண்டத்தர்’ (5.51) என்ற திருக்குறுந் தொகைப் பதிகம் பாடிப் பாலைத்துறை அப்பனைப் பரவிப் போற்றுகின்றார்.

தொடரும் தொண்டரைக் துக்கங் தொடர்ந்துவக் தடரும் போதர னாயருள் செய்பவர் கடலின் கஞ்சணி கண்டர் கடிபுனம் படரும் செஞ்சடைப் பாலைத் துறையரே. (8) என்பது இப்பதிகத்தின் எட்டாம் பாடல்.

திருப்பாலைத்துறை ஈ ச னி ட ம் விடைபெற்றுக் கொண்டு அவளிவணல்லூர் வருகின்றார். வந்தவர் தோற்றினான் (4.59) என்ற முதற் குறிப்பினையுடைய செந்தமிழ்த் திருநேரிசைமாலையால் வழிபடுகின்றார்.

37. ஆவூர்ப் பசுபதீச்சரம் : சுந்தரப் பெருமாள் கோயில் இருப்பூர்தி நின்லயத்திலிருந்து 4 கல் தொலைவி லுள்ளது. சம்பந்தரால் பாடல் பெற்ற தலம்.

38. பாலைத்துறை : பாபநாசம் இருப்பூர்தி நிலையத் திலிருந்து 1 கல் தொலைவிலுள்ளது. -

39. அவளிவ_ணல்லூர் : நாகூர், தஞ்சை இருப்பூர்தி வழியில் கோயில் வெண்ணி (நீடாமங்கலத் தருகிலுள்ளது) என்ற நிலையத்திலிருந்து 5 க்ல் தொலைவு. இத்தலத்திற்கு அப்பர் பெருமான் வந்த சூழலும் பாடிய சூழலும் அறியக் கூடவில்லை, - - . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/150&oldid=634143" இலிருந்து மீள்விக்கப்பட்டது