பக்கம்:நாவுக்கரசர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அப்பூதியடிகளுடன் தொடர்பு

நல்லூரில் சிவபெருமானால் திருவடி சூட்டப்பெற்ற திருநாவுக்கரசர் அத்தலத்தில் கில நாட்கள் தங்கியிருக் கின்றார். இந்நாட்களில் கருகாவூர், ஆவூர், பாலைத் துறை முதலிய தலங்களை வழிபடுகின்றார். பின்பு நல்லூரி னின்றும் புறப்பட்டுத் திருப்பழனம் சென்று அத்தலத்துப் பெருமானை வழிபட்டு அருகேயுள்ள பல தலங்களை இறைஞ்ச எண்ணித் திங்களுர் வழியாகச் செல்லுகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான்,

பொருப்பரையன் மடப்பிடியின்

உடன்புணரும் சிவக்களிற்றின் திரு.பழனம் பணிந்துபணி

செய்திருநா வுக்கரசர் ஒருப்படுகா தலிற்பிறவும்

உடையவர்தம் பதிவணங்கும் விருப்பினொடுந் திங்களுர்

மருங்குவழி மேவுவார்? என்று காட்டுவார்.

இவ்வாறு சென்று கொண்டிருக்கும்போது தண்ணிர்ப் பந்தல் ஒன்றைக் காண்கின்றார். அதன் கண் திருநாவுக் கரசர் தண்ணிர்ப் பந்தல்’ என்று எழுதப் பெற்றிருந்தது.

1. முன்னர் சொல்லப் பெற்றது. பக்கம் 109 காண்க. 2. திங்களுர் அப்பூதியடிகளுர் (பெ.பு.திருநாவுக்.200)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/155&oldid=634148" இலிருந்து மீள்விக்கப்பட்டது