பக்கம்:நாவுக்கரசர்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகளுடன் தொடர்பு 113

இன்னும் பல இடங்களில் திருநாவுக்கரசர் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. இத் தண்ணீர்ப் பந்தரை இப் பெயருடன் இங்கு அமைத்தவர் யார்?’ என்று அருகிலிருந் தவர்களை நோக்கி வினவுகின்றார். அது கேட்டு அங்கு உள்ளவர்கள், ‘இத்தண்ணிர்ப் பந்தருடன் இவ்விடத்து எங்கும் உள்ள கிணறு, குளம், அறச் சாலைகள், இள மரக் காக்கள் முதலிய எல்லாவற்றையும் அந்தணரில் மேம்பட்ட அப்பூதியடிகள் என்பார் திருநாவுக்கரசர் பெயராலேயே செய்தமைத்தார்’ என்று கூறுகின்றனர்.

நாவுக்கரசர் பெருமான் இவ்வறங்களைச் செய்து வரும் அப்பூதியடிகள் எவ்விடத்தார்?’ என்று வினவு கின்றார். அந்த அந்தணர் பெருமான் திங்களூரில் வாழ் பவரே. இப்பொழுதுதான் இங்கிருந்து தம் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அவர் இல்லமும் அணித்தேயுள்ளது’ என்று அருகிலிருந்தவர்கள் மறுமொழி பகர்கின்றனர். இதனைக் கேட்ட அப்பர் பெருமான் அந்தணர் பெருமானின் திருமாளிகைக்கு எழுந்தருளுகின்றார்.

கயிலைநாதரின் தமராகிய அவரது வருகையை உணர்ந்த அப்பூதியடிகள், அவருடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றார். என்ன மாதவம் செய்ததோ இச்சிறுகுடில்? அருளுருவாய தாங்கள் அடியேன் குடிலுக்கு எழுந்தருளியது என் முன்னைத் தவப் பயனே’ என மகிழ்ந்து உரைக்கின்றார். நாம் திருப்பழனத் திறைவனை வணங்கி வழிபட்டு வரும்பொழுது வழியிலே நீர் நிறுவி யுள்ள தண்ணிர்ப் பந்தரைக் கண்டும், இங்கனம் நீர் செய்து வரும் பிற அறங்களைப் பற்றி நல்லோர் பலர் மூலம் கேட்டும் நூம்மைக் காண விரும்பி இங்கு வந்தோம்’ எனக் கூறுகின்றார்.

மேலும், சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப் பந்தரிலே நும்முடைய பெயரை எழுதாது

pir—&

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/156&oldid=634149" இலிருந்து மீள்விக்கப்பட்டது