பக்கம்:நாவுக்கரசர்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ந்ாவுக்கரசர்

வேறொருவர் பெயரை எழுதியதற்குக் காரணம் யாது? அதனைக் கூறுவீராக’’ என அப்பூதியடிகளை வினவுகின் றார் நாவுக்கரசர். இவ்வுரை கேட்டு நிறையழிந்த சிந்தைய ராகின்றார் அப்பூதியடிகள். தம்முன் நிற்கும் சிவனடி யாரை நோக்கி, நீர் நன்மொழிகளை அருளிச் செய திலீர், பழி பாவங்கட்கு நாணாத இயல்புடைய சமணப் பதகருடன் கூடிப் பல்லவ மன்னன் செய்த சூழ்ச்சிகளை யெல்லாம் திருத்தொண்டின் உறைப்பாலே வென்றருளிய மெய்த் தொண்டராகிய திருநாவுக்கரசரின் திருப்பெயரோ வேறொருவர் பெயர்? நம்மை ஆளாகவுடைய சிவபெருமா னது திருவடிக்குவிரும்பிப் புரியும் திருத்தொண்டினாலே இப்பிறப்பிலேயே இடர்களையெல்லாம்வென்று உய்யலாம் என்னும் பேருண்மையை அடியேனைப் போன்ற எளியோர் களும் தெளிந்து உய்யும் வண்ணம் சிவத்தொண்டு புரிந்த திருநாவுக்கரசரது திருப்பெயரை அடியேன் எழுத நீர் இக் கொடு மொழியை அடியேன் கேட்கும்படி கூறினர்.பொங்கி எழும் கருங்கடலிலே கல்லையே தெப்பமாகக் கொண்டு கரையேறிய அவருடைய பெருமையை அறியாதார் யாருளர்? மங்கலமாம் திருவேடத்துடன் நின்று இம்மொழி பேசிய நீர் எங்குறைவீர்? நீர்தாம் யார்? இயம்புவீர்” என வெகுண்டு உரைக்கின்றார்.

இங்ஙனம் திருமறையோர் சினமுற்று மொழிந்ததைக் கேட்டு அவரது அன்பின் திறத்தை அறிந்த நாவுக்கரசர், :புறச்சமயத்தினின்று மீளும் பொருட்டு இறைவன் சூலை நோயினைத் தந்து ஆட்கொள்ள அடைந்து உய்ந்த தெளிந்த உணர்வற்ற சிறுமையேன் அடியேன்” என மறு மொழி தருகின்றார். இவ்வுரை கேட்ட அப்பூதியடிகள் தம் முடைய குல தெய்வமாகிய திருநாவுக்கரசரே இங்கு எழுந் தருளினாரெனத் தெளிகின்றார். பெருமகிழ்ச்சியுறுகின் றார். இதனைச் சேக்கிழார் பெருமான், .

3. பெ. பு : அப்பூதியடிகள் 13-15.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/157&oldid=634150" இலிருந்து மீள்விக்கப்பட்டது