பக்கம்:நாவுக்கரசர்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் - (3)

திருநல்லூரில் தங்கிக் கைத்தொண்டு புரிந்து வந்த அப்பர் பெருமானுக்குத் திருவாரூரில் கோயில் கொண் டிருக்கும் புற்றிடங் கொண்ட பெருமானைச் சேவிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. வழியிலுள்ள சில தலங்களைச் சேவித்துக்கொண்டு திருவாரூர் வர நினைக் கின்றார். இப்பொழுது சோழ நாட்டுத் திருத்தலப் பயணம் தொடர்கின்றது.

மூன்றாவது சுற்று : பயணத்தைத் தொடங்கியவர் முதலில் வலஞ்சுழி என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். அப்பர் பெருமான் இத்தலத்து எம்பெருமானை மூன்று திருப்பதிகங்களால் வழிபடுகின்றார். ஒதமார்கடலின்’ (5.65) என்ற முதற் குறிப்பினையுடைய திருக்குறுந் தொகைப் பதிகம் பாடிப் போற்றுகின்றார்.

கண்ய ரிக்கும்கை கூப்புங்கண் மூன்றுடை நண்ப னுக்கெனை நான்கொடுப் பேனெனும்

1. வலஞ்சுழி (திருவலஞ்சுழி) : மயிலாடுதுறை.தஞ்சை இருப்பூர்தி விழியில் சுவாமிமலை என்ற நில்ையத்திலிருந்து ; கல் தொலைவிலுள்ளது. கும்பகோணத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. பிள்ளையார் சந்நிதி இத்தலத்தில் மிகு புகழ் வாய்ந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/167&oldid=634161" இலிருந்து மீள்விக்கப்பட்டது