பக்கம்:நாவுக்கரசர்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.


xiv.

சீரார் காழிப் பிள்ளையார்

திகழ்பே ரன்பால் அப்பரெனச் செப்பும் திருநா வுக்காசர்

சீர்த்தி மிக்க வரலாறும் பாரோர் வாழ நாவரசர்

பரிவால் திருவாய் மலர்ந்தருளும் பதிகப் பாடற் பொருள்நலமும்

பண்பார் தலத்தின் வரலாறும் ஆர்வ முடனே கற்போர்கள்

அறிந்து மகிழத் தக்கவண்ணம் அறமார் காவுக்கரசரெனும்

ஆய்வு நூலை அளித்ததனால்: சோர்வி லாமல் தமிழ்ப்பணிசெய்

தோற்ற முடையான் கற்றோர்கள் சுப்பு ரெட்டி யாரெனும்பேர்

செப்ப விளங்கும் துரயோனே.

மாலோன் அருளின் ஆழ்வார்கள்

மூழ்கித் திளைத்து வாய்மலர்ந்த

நாலா யிரமும் முன்னோர்கள்

நவின்ற உரையின் நயப்பாடும் ஏல வுணர்ந்தே கற்போர்கள்

இன்ப முறவே உரைநடைநூல் சால வரைந்தான் திருத்தலத்தின்

பெருமை பலவுஞ் சாற்றினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/17&oldid=634164" இலிருந்து மீள்விக்கப்பட்டது