பக்கம்:நாவுக்கரசர்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (8) 127

நீலவுரு வயிரகிரை பச்சை செம்பொன்

நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலும் கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்

குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே (5) என்பது ஐந்தாவது வாடாத நறுமலர்த் தாண்டகம்.

கீழ்க்கோட்டக் கூத்தனாரிடம் விடைபெற்றுக்கொண்டு நாலூர் வருகின்றார். நாலூர் மயானத் திறைவனிடம் (பதிகம் இல்லை) விடைபெற்றுக் கொண்டு தென்திருச் சேறை: வருகின்றார். இத்தலத்து எம்பெருமானை இரண்டு பதிகங்களால் வழிபடுகின்றார். ‘பெருந்திரு இமவான்’ (4.73) என்ற முதற்குறிப்புடைய திருநேரிசைப் பதிகம்படி சேறை எம்பெருமானைத் துதிக்கின்றார். இதில்,

நிறைந்தமா மணலைக் கூப்பி

நேசமோ டாவின் பாலைக்

கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை

எறிந்தமா ணிக்கப் போதே

எழில்கொள்சண் டிசன் என்னச்

சிறந்தபே ரளித்தார் சேறைச்

- செந்நெறிச் செல்வ னாரே. (5)

என்பது ஐந்தாவது திருநேரிசை. பூரியா வரும்’ (5.77) என்ற திருக்குறுந் தொகைப் பதிகத்தில்,

4. நாலூர் மயானம் : கும்பகோணம் இருப்பூர்தி நிலை யத்திலிருந்து 8; கல் தொலைவு. கொடவாசல் பேருந்து வழி. சம்பந்தர் பாடல் பெற்றது (நாலூர் என்பது நாலூர் மயானமாக இருத்தல் வேண்டும் என்பது சி. கே. சுப்பிர மணிய முதலியார் கருத்து) -

5. சேறை (உடையார் கோயில்): கும்பகோணம் இருப் பூர்தி நிலையத்திலிருந்து 8 கல தொலைவு. பேருந்து வழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/170&oldid=634165" இலிருந்து மீள்விக்கப்பட்டது