பக்கம்:நாவுக்கரசர்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (8) 129

என்பது ஏழாவது தமிழ்மணங் கமழும் வாடாத தாண்டக நறுமலர். இப்பதிகத்தில் 8, 9 பாடல்கள் காணப்பெற வில்லை.

சிவபுரத்துச் செல்வனிடம் விடைபெற்றுக்கொண்டு அரிசிற்கரைப்புத்தூர் வருகின்றார். முத்துரும் (5.61) என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகத்தில்,

அருப்புப் போன்முலையார் அல்லல் வாழ்க்கைமேல் விருப்புச் சேர்கிலை விட்டுநல் லிட்டமாய்த் திருப்புத் தூரனைச் சிங்தை செயச்செயக் கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே. (5)

என்பது ஐந்தாவது பாடல். இதிலுள்ள பாடல்கள் யாவுமே பயில்வார்க்குக் கருப்புச்சாறுபோல் இனிமை பயக்கும்.

புத்துார்ப் புனிதரிடம் விடைபெற்றுக் கொண்டு திருக் கடுவாய்க்கரைப் புத்துாருக்கு’ வருகின்றார். ஒருத்தனை’ (5.62) என்று தொடங்கும் திருக்குறுந்தொகைப் பதிகத் தில்,

9. அரிசிற் கரைப்புத்துர் (அழகார் புத்துார்): கும்ப கோணத்திலிருந்து 4 கல் தொலைவு. தளர் வெய்திய கிழப் பருவத்திலும் தவிராது நாள்தோறும் முப்போதும் திருமேனி தீண்டிப் பூசிக்கும் புகழ்த்துணை நாயனார் திருமுழுக்காட்டும்போது, ஒருநாள் குடம் நழுவிச் சிவலிங் கத் திருமேனியின்மேல் விழுந்தது. இந்தத் தவற்றுக்கு மிக மிக அஞ்சிய நாயனாருக்கு இறைவன் அபயம் அளித்து ஓய்வு கொடுத்து அவர் உணவுக்காக நாடோறும் ஒரு பொற்காசு கொடுத்த வரலாற்றைச் சம்பந்தரின் 2.6:7 பாடலும் சுந்தரரின் 7.9:6 பாடலும் கூறும். - 10. கடுவாய்க்கரைத்தென்புத்துார் (ஆண்டான் கோயில்): கும்பகோணத்திலிருந்து 6 கல் தொலைவிலுள்ளது.பேருந்து வழி.

pr—9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/172&oldid=634167" இலிருந்து மீள்விக்கப்பட்டது