பக்கம்:நாவுக்கரசர்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (8) 131

பரிவினாற் பெரியோ ரேத்தும்

பெருவேளுர் பற்றி னானை

மருவிகான் வாழ்த்தி உய்யும்

வகையது நினைக்கின் றேனே. (9)

என்பது ஒன்பதாவது திருநேரிசை வாடா நறுமலர். எல்லாப் பாடல்களும் படித்து இன்புறத் தக்கவை.

பெருவேளுர்ப் பெம்மானிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு.விளமர் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். விளமர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெரு மானை வழிபட்டுத் (பதிகம் இல்லை) திருவாரூர் சென்ற டைகின்றார். அப்பர் பெருமான் இத்தலத்து இறைவனை 21 பதிகங்களால் வழுத்துகின்றார். இதனை அடுத்துவரும் ‘திருவாரூர் நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் காண்போம்.

திருவாரூர்ப் பதியில் பல நாட்கள் தங்கி அணி விதிப் பணி செய்து இருக்கும் நாளில், சில தலங்களை வழி பட நினைக்கின்றார்.

13. விளமர்: திருவாரூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர் பாடல் பெற்றது.

14. திருவாரூர் (ஆரூர்): மயிலாடுதுறை-காரைக்குடி இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. கச்சி ஏகம்பத்தையும் இத்தலத்தையும் பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவித் தலமாகக் கருதுவதுண்டு. சந்நிதிக்குத் தெற்கே தன்ரிச் சந்நிதியாகவுள்ள தியாகராசர் சந்நிதி மிகுபுகழ் வாய்ந்தது. திருமூலட்டானத்தின் பெயர் பூங்கோயில் என்பது. தலம் மூர்த்தியின் சிறப்புக்கு ஒத்த சிறப்புடையது. சோழ மன்னர்கள் முடிசூட்டு விழா கொண்டாடிய 5 நகரங் களுள் ஒன்று. ஏயர்கோன் கலிக்காமர், காடவர் கோன், கழிற்சிங்கர், செருந்துணையார், தண்டியடிகள், திருநீல கண்ட யாழ்ப்பாணர், நமிநந்தியடிகள், விறன்மிண்டர் முதலிய நாயன்மார்கள் வாழ்க்கைத் தொடர்புடைய தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/174&oldid=634169" இலிருந்து மீள்விக்கப்பட்டது