பக்கம்:நாவுக்கரசர்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நாவுக்கரசர்

போது நிகழ்ந்த பெருமையினை விரித்துரைப்பீர் என்று கேட்க, அவரும் வீதிவிடங்கப் பெருமானது ஆதிரைத் திருநாளின் பெருமையினை இன்ன தன்மையினதென்று எவ்வாறு உரைப்பேன்’ என்று கூறி முத்துவிதானம்’ (4.2.1) என்ற திருப்பதிகத்தால் விளக்குகின்றார். திருவாரூர் இறைவன் ஆதிரைத் திருநாளில், முத்துவிதானத்தில், கவரி யுடன் பக்தர்களும் பாவையரும் சூழ, வித்தகக் கோலத்தில் வந்தருள்வார். அண்மையில் உள்ளார்க்கும் சேயார்க்கும், போற்றித்துதிப்பவர்க்கும் அணியராவார்; கொடி வீதிகளும் மணி மாடங்களும், பவள மாலைகளுடன் தோன்றும் ஆரூரில், தொண்டர்கள் பித்தரைப்போல் பிதற்றுவர். சங்கும் பாறையும், கல்லவடம் என்னும் கருவியும் ஒலிக்க, அதனை இடி முழக்கம் என்றெண்ணி மயில்கள் ஆடும். இந்திரன் முதலானவரும் துதிப்பர். இங்கனம் தொண்டர் புடைசூழ இறைவன் எழுந்தருள்வார்’ என்று கூறுகின் றார். இதனைக் கேட்டருளிய காழிப்பிள்ளையார் திரு வாரூர்ப் பெருமானைச் சேவிக்கும் பெருவிருப்புடையவ ராய், அப்பரிடம் திருவாரூர் வழிபட்டு இங்கு வந்து உம் முடன் உடன் அமர்வேன்’ என்று கூறி விடைபெற்றுச் செல்கின்றார்.

இந்நிலையில் நாவுக்கரசர் திருப்புகலூரில் சிவ பெருமானைப் பணிந்து திருமாலைகள் சாத்திக்கொண்டும் கைத் தொண்டு புரிந்துகொண்டும் காலம் கழிக்கின்றார். இப்பொழுது திருப்புகலூர்ப் பெருமானை ஐந்து திருப்பதி கங்களால் வழிபடுகின்றார். செய்யர் வெண்ணுலார்’ (4.16) என்ற முதற் குறிப்பினையுடைய பதிகத்தில்,

பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக் கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து திருந்தா மனமுடை யார்திறத் தென்றும் பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே. (3) என்பது மூன்றாவது பாடல். பகைத்திட்டார்’ (4.54) என்று தொடங்கும் திருநேரிசைப் பதிகத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/181&oldid=634177" இலிருந்து மீள்விக்கப்பட்டது