பக்கம்:நாவுக்கரசர்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - (3) 139

ருேமாய்த் தீயு மாகி

நிலனுமாய் விசும்பு மாகி ஏருடைக் கதிர்களாகி

இமையவர் இறைஞ்ச கின்று ஆய்வதற் கரிய ராகி

அங்கங்கே யாடு கின்ற தேவர்க்குங் தேவ ராவார்

திருப்புக லூர னாரே (8) என்பது எட்டாவது திருநேரிசை.

தன்னைச்சாண் (4.105) என்ற திருவிருத்தப் பதி கத்தில், - -

பொன்னை வகுத்தன்ன மேனியனே

புணர்மென் முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே

தமியேற் கிரங்காய் புன்னை மலர்த்தலை வண்டுறங்கும்

புகலூ ரரசே . என்னை வருத்திலையேல் இடும்பைக்

கிடம்யாது சொல்லே (2) . என்பது இரண்டாவது திருவிருத்தம். இப்பதிகத்தில் 3, 5, 6, 7, 8, 9, என்ற எண்ணுடைய ஆறு பாடல்கள் காணப்பெற வில்லை. “துன்னக் கோவண’ (5.46) என்ற திருக்குறுந் தொகைப் பதிகத்தில்,

தத்து வந்தலை கண்டறி வாரிலைத் தத்து வந்தலை கண்டவர் கண்டிலர் தத்து வந்தலை கின்றவர்க் கல்லது - தத்து வனலன் தண்புக லூரனே. (9) என்பது ஏழாவது திருக்குறுந்தொகை. எண்ணுகேன்’ (6.99) என்ற திருத்தாண்டகம் இவர் சிவப்பேறு அடைந் ததைக் கூறும் இயலில் காட்டப் பெற்றுள்ளது.

மேலும் திருப்புகலூரில் உறையும் நாட்களில் வேறு சில சிவத்தலங்களையும் வணங்கிப் போற்றுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/182&oldid=634178" இலிருந்து மீள்விக்கப்பட்டது