பக்கம்:நாவுக்கரசர்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 நாவுக்கரசர்

முதலில் செங்காட்டங்குடிக்கு வருகின்றார். பெரும் தகையைப் பெறற்கரிய” (6.84) என்ற திருத்தாண்டகப் பதிகம் பாடி வழிபடுகின்றார் செங்காட்டங்குடிச் செல்

உருகுமணத் தடியவர்கட் கூறும் தேனை

உம்பர்மணி முடிக்கணியை உண்மை கின்ற பெருகுநிலைக் குறியாளர் அறிவு தன்னைப்

பேணியஅந் தணர்க்குமறைப் பொருளைப் பின்னும் முருகுவிரி நறுமலர்மேல் அயற்கும் மாற்கும்

முழுமுதலை மெய்த்தவத்தோர் துணையை வாய்த்த திருகுகுழல் உமைநங்கை பங்கன் றன்னைச்

செங்காட்டங் குடியதனில் கண்டேன் நானே. (3) வனை. என்பது மூன்றாவது பாடல். உருகுமணத் தடியவர் கட்கு ஊறும் தேனை என்ற தொடர்திருமங்கையாழ்வாரின் உளங்கனிந்திருக்கும் அடியவர்தங்கள் உள்ளத்தில் ஊறும் தேனை 21 என்ற திருமொழித் தொடரை நினைவு கூரச் செய்கின்றது. அப்பர் பெருமானே இப்பதிகத்து இன்னொரு பாடலில் (7) தித்தித்து என் மனத்துள் ஊறுந்தேனை என்று சொல்லி மகிழ்கின்றார். சிறார்கள் தாயையோ தந்தையையோ நினைக்கும்போது அவர்கள் உள்ளத்தில் எழுவது போன்ற உணர்ச்சியை இறைவனை நினைக்கும் போது அடியவர்கள் மனத்தில் அடியவர்க்கு ஆரமுதம் ஆனான்’ என்றாற் போலத் தேனாக இனிக்கின்றான்.

26. செங்காட்டங்குடி (திருச்செங்காட்டங்குடி): இத் தலம் நன்னிலத்திலிருந்து 6 கல் தொலைவிலுள்ளது. வழி யில் திருப்புகலூர், இராமனதிச்சரம், திருக்கண்ணபுரம் (வைணவத் தலம்) உள்ளன. சிறுத்தொண்ட நாயனார் பிள்ளைக்கறி யளித்த அற்புதத் தல்ம். இவ்வற்புதம் அமுது படையல் உற்சவம்’ என்று சித்திரைத் திங்கள் பரணியன்று மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. உத்கிராபதி சுவாமி திருவெழுச்சி,அவர் தங்கியிருந்த திரு ஆத்தி மரம் முதலியன காணலாம். சிறுத்தொண்டர் வாதாவிப் போர் வென்று கொணர்ந்த கணபதியைப் பூசித்ததால் கோயிற் பெயர் ‘கணபதீச்சரம்’ ஆயிற்று.

27. பெரி. திரு. 4.3:9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/183&oldid=634179" இலிருந்து மீள்விக்கப்பட்டது