பக்கம்:நாவுக்கரசர்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 . திருவாரூர் நிகழ்ச்சிகள்

SAAMAMAMMAMMMAMMMAMMA AMMAMMSAMMMMMMMMSMAMMMAeMMAAAS

தேவாரப் பாடல்கள் பெற்ற தலங்களுள் திருவாரூர் பல சிறப்புகளை ஒருங்கே பெற்றுள்ளது. ஏழு திருமுறை களிலும் மிகுதியான பாடல்கள் இத்திருத்தலத்திற்கே உண்டு. இத்தலத்திற்கு அதிகமான பதிகங்கள் அருளியவர் அப்பர் பெருமான், இவர் இத்தலத்தை வழிபட்ட பதிகங் கள் 21 (சம்பந்தர்.6; சுந்தரர் 8) இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய இம்மூன்றாலும் சிறந்தது.

மூர்த்தி : புற்றிடங் கொண்டார், வன்மீகநாதர், திரு மூலட்ட நாதர். கச்சி ஏகம்பத்தையும் இத்தலத்தையும் பஞ்ச பூதத் தலங்களுள் பிருதிவிதலமாகக் கருதுவதுண்டு. மூலத்தானத்திலுள்ள சிவலிங்க மூர்த்திக்கு (ஏகம்பத்தில் செய்வதுபோலவே) புனுகு சட்டமே சாத்தப்பெறுகின்றது. திருமுழுக்கு ஆவுடையாருக்கே. சந்நிதிக்குத் தெற்கே தனிச் சந்நிதியாகவுள்ள தியாகராச சுவாமியின் சந்நிதி மிகு புகழ் வாய்ந்தது. திருமால் நாடோறும் இம் மூர்த்தியைப் பூசித் துத்தமது இதயத் தானத்திலேயே எழுந்தருளுவித்தனர். முசுகுந்த சக்கரவர்த்தி பெற்ற ஏழுவிடங்க மூர்த்திகளுள் இங்குள்ள மூர்த்தியையே திருமால் பூசித்தது. இவரைப்

1. ஆரூர், கச்சி ஏகம்பம், மறைக்காடு ஆகிய மூன்று தலங்கட்கே ஏழுதிருமுறைகளிலும் பதிகங்கள் உண்டு, சீகாழிக்கு மிகுதியான் பதிக எண்ணிக்கை 71 ஆக இருப் பினும், ஆறாம் திருமுயிைல் ஒரு பாடல்கூட இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/187&oldid=634183" இலிருந்து மீள்விக்கப்பட்டது