பக்கம்:நாவுக்கரசர்.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நாவுக்கரசர்

பயிர்தனைச் சுழிய விட்டுப்

பாழ்க்குர்ே இறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க் காற்றேன்

ஆரூர்மூ லட்ட னாரே. (1) என்பது ஏழாவது வாடாத தமிழ் மணம் கமழும் நறுமலர், இப்பதிகத்தின் பாடல்கள் யாவும் படித்து அநுபவிக்கத் தக்கவை.ஐம்புலன்கள் படுத்தும் பாட்டைப் பட்டவர்த்தன மாக எடுத்துக் காட்டுகின்றார். குழல் வலங் கொண்ட” (4.53) என்ற திருநேரிசைப் பதிகத்தில்,

‘நாகத்தை கங்கை அஞ்ச

கங்கையை மஞ்ஞை என்று வேகத்தைத் தவிர காகம்

வேழத்தின் உரிவை போர்த்துப் பாகத்தின் நிமிர்தல் செய்யாத்

திங்களை மின்னென் றஞ்சி ஆகத்திற் கிடந்த நாகம்

அடங்கும்ஆ ரூரனார்க்கே. (2) என்பது இரண்டாம் பாடல். இதிலுள்ள கற்பனை சிந்தித்து மகிழத் தக்கது.

அடுத்து, இரண்டு திருக்குறுந்தொகைப் பதிகங்களால் மூலட்டானத்தானை இறைஞ்சுகின்றார். எப்போதும்” (5.5) என்ற முதற் குறிப்புடைய குறுந்தொகைப் பதிகத் நில்,

துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்

வளைக்கை யாளையோர் பாக மகிழ்வெய்தித்

திளைக்குங் திங்கட் சடையில் திசைமுழு

தளக்குஞ் சிங்தையர் போலும்ஆ ரூரரே. (4) என்பது நான்காவது நறுமலர். அடுத்து கொக்கரை’ (5.7) என்ற முதற் குறிப்பையுடைய திருக்குறுந்தொகைப் பதிகத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/195&oldid=634192" இலிருந்து மீள்விக்கப்பட்டது