பக்கம்:நாவுக்கரசர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

டாக்டர் அ. மா. பரிமணம் எம்.ஏ.,எம்.லிட்.,பி.எச்.டி. (பதிப்பாசிரியர், வாழ்வியற் கலைக் களஞ்சியம், தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சை.613005)

சிறந்த இசையைக் கேட்கும் ஒருவன், தன்னையும் மறந்து அதன் இன்பத்தில் திளைக்கின்றான். அழகுமிக்க ஒவியத்தைக் காணும் ஒருவன், அக்காட்சியில் ஈடுபட்டு, இன்பமடைந்து மெய்மறந்து நிற்கின்றான். அந்த இசை யும் ஒவியமும் அகன்றுவிட்டால், அவற்றைக் கேட்டும் கண்டும் இன்பத்தில் திளைத்தவர்கள், அவ்வின் பத்தை நினைவுகூர்ந்து மகிழ முடியுமே தவிர, அப்போது பெற்ற இன்பத்தினைப் பெற முடியாது. ஆனால் ஓர் அழகு மிக்க கவிதையை இலக்கியத்தைப் பயின்றவர்கள் அது தம்மை விட்டு நீங்கிவிட்டாலும், அதனை மீண்டும் நினைவிற் கொண்டு, அதே இன்பத்தை எய்தலாம். முன்பு எய்திய இன்பத்தினும் மிக்க இன்பத்தை எய்தவும் கூடும்; தாம் பெற்ற அவ்வின்பத்தை மற்றவர்களும் பெறுமாறு செய்ய வும் கூடும். இது கவிதைக் கலைக்கு - இலக்கியக் கலைக்கு. அமைந்த தனிச் சிறப்பாகும். -

அஞ்சிறைத் தும்பியாகி இலக்கிய இன்பம் நுகர்ந்தோர் வேறு இன்பத்தினை விரும்பார். புலவர் பலர் கூடி, உரை

b

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/20&oldid=634197" இலிருந்து மீள்விக்கப்பட்டது