பக்கம்:நாவுக்கரசர்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு

AMAMMMMAAMMMMM MiMMM MMMMMMMMMMMMeAMMMMAAASAAAA

திருப்புகலூரில் எழுந்தருளியிருந்த நாவுக்கரசர் பெருமானும் காழிப்பிள்ளையாரும் திருநீல நக்கர், சிறுத் தொண்டர், முருக நாயனார் முதலிய அடியார்கள் விடை பெற்றேகத் திருஅம்பர் என்னும் திருப்பதியை அடை கின்றனர். இதனைச் சேக்கிழார் பெருமான்,

திருநீல நக்கடிகள்

சிறுத்தொண்டர் முருகனார் பெருநீர்மை அடியார்கள்

பிறரும்விடை கொண்டேக ஒரு நீர்மை மனத்துடைய

பிள்ளையா ரூடன் அரசும் வருகீர்செஞ் சடைக்கரங்தார்

திருஅம்பர் வணங்கினார்”.

1 . அம்பர் பெருந்திருக்கோயில் (அம்பல் கோயில்): மயிலாடு துறை - கான்ரிக்குடி இருப்பூர்தி வழியில் பூந் தோட்டம் என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. கோட்செங்க சோழ நாயனார் எடுப்பித்த எழுபது கோயிலுள் இதுவும் ஒன்று:செயற்கையாலான கட்டுமலைக் கோயில். யானை உள் நுழையாதபடிச் சிறு வாயில் வைத்துக் கட்டப் பெறும். இவ்வகைக் கோயிலுக்கு மாடக் கோயில், பெருங் கோயில் என்று பெயர். சோமாசி மாற நாயனார் தமது மறையோர் குலத்துக்கேற்ப நாடோறும் முத்தீ வளர்த்து வழிபட்டு முத்தி பெற்ற தலம்.

2. பெ, பு. திருநாவுக். 246,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/201&oldid=634199" இலிருந்து மீள்விக்கப்பட்டது