பக்கம்:நாவுக்கரசர்.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காழிப் பிள்ளையாருடன் தல வழிபாடு if

அடுத்து, திருக்கடவூர் மயானம் என்ற திருத்தலத்துக்கு வருகின்றனர். இங்கு அப்பர் பெருமான் குழைகொள் காதினர் (5.88) என்று தொகைப் பதிகம் பாடித் திருக் கடவூர் மயானத்தாரை வழிபடுகின்றார். இதில்

உன்னி வானவர் ஒதிய சிந்தையில் கன்னல் தேன்கட வூரின் மயானத்தார் தன்னை நோக்கித் தொழுதெழு வார்க்கெலாம் பின்னை என்னார் பெருமா னடிகளே (2) என்பது இரண்டாவது பாடல்.

மயானத்துப் பெருமானிடம் விடைபெற்றுக்கொண்டு. ஆக்கூர் வந்தடைகின்றனர். அப்பர் பெருமான் முடித் தாமரையணிந்த’ (6.21) என்ற திருத்தாண்டகப் பதிகம் பாடித் தான்தோன்றியப்பனை வழிபடுகின்றார். இப் பதிகத்தின்,

மாதுரும் வாள்கெடுங்கண் செவ்வாய் மென்தோள்

மலைமகளை மார்பத் தணைந்தார் போலும் மூதூர்முது திரைகள் ஆனார் போலும்

முதலும் இறுதியும் இல்லார் போலும் தீதுார கல்வினையாய் கின்றார் போலும்

திசையெட்டும் தாமேயாஞ் செல்வர் போலும் ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும்

ஆக்கூரில் தான்தோன்றி அப்ப னாரே. (6)

5. திருகடவூர் மயானம் (திருமெய்ஞ்ஞானம்): திருக் கடையூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 1; கல் தொலைவு. பிரம்மதேவனை நீறாக்கிய மயானம். -

8. ஆக்கூர்: மயிலாடுதுறை-தரங்கம்பாடி இருப்பூர்தித் தடத்தில் ஆக்கூர் என்ற நிலையத்திலிருந்து ‘கல் தொலைவு சிறப்புலி நாயனார் தலம். ஆலயப் பெயர் தான்தோன்றி மாடம் என்பது. (தான்தோன்றி-சுயம்பு)

நா.-11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/204&oldid=634202" இலிருந்து மீள்விக்கப்பட்டது