பக்கம்:நாவுக்கரசர்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நாவுக்கரசர்

என்பது ஆறாவது திருத்தாண்டகப் பாடல். இப்பதி கத்திருத்தாண்டகங்கள் யாவும் பன்முறை படித்து அது பவிக்கத் தக்கவை.

ஆக்கூர் அப்பனிடம் விடைபெற்றுக்கொண்டு மீயச்சூர் என்ற தலத்திற்கு வருகின்றனர் இரு பெருமக்களும். மீயச்சூர் இளங்கோயில் எம்பெருமான்மீது அப்பர் தோற்றுங் கோயிலும் (5.11) என்ற திருக்குறுந்தொகைப் பதிகம் பாடிப் போற்றுகின்றார்.

படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் ணிற்றினன் விடைகொ ளுர்தியி னான்திரு மீயச்சூர் இடைகொண் டேத்தகின் றாரிளங் கோயிலே. (7) என்பது இப் பதிகத்தின் ஏழாவது பாடல். இளங்கோயிலின் பெருமையை நாவுக்கரசர் போற்றியிருப்பதைவிட யாரும் போற்றியிருத்தல் (  :. -

7. மீயச்சூர்: பேரளம் - காரைக்கால் இருப்பூர்திப் பாதையில் ப்ேரளம் நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. தேவியார் திருக்கோலம் அமர்ந்த நிலையில் உள்ளது; அழகு மிக்கது. மீயச்சூர் இளங்கோயில் மேற்படிக் கோயிலின் திருச்சுற்றில் (பிரகார்த்தில்) உள்ளது. இளங்கோயில் என்பது பாலாலயம் என்று வடமொழியில் வழங்குவர். கோயில் திருப்பணி நடைபெறுங் காலத்தில் மூலத்தான மூர்த்தியைக் கலா கர்ஷணம் செய்து ஒரு பாலாலயத்தில் வேறொரு மூர்த்தியில் ஆவாஹனம் செய்து பூசிப்பது ஆகமமுறை. அப்பர் சுவாமிகள் இத்தலம் சென்ற காலத் தில் திருப்பணி நடந்தது போலும், அவர் திருவாக்கில் மீயச்சூருக்குப் பதிகம் இல்லாமல் இளங்கோயிலுக்கே பதிகம் இருப்பதும், இப்பதிகத்திலும் தோற்றும் கோயி லும் தோன்றிய கோயிலும் (அப்பர் 5.11:1) என்ற குறிப் பிருப்பதும் சம்பந்தர் திருவ்ாக்கில் இளங்கோயிலுக்கு இல்லாதிருப்பதும் மீயச்சூருக்கே பதிகம் (சம்பந்தர் 12:02) இருப்பதும் மேற்கூறிய உண்மையை வலியுறுத்தும். இது காவிரியின் தென்கரைத்தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/205&oldid=634203" இலிருந்து மீள்விக்கப்பட்டது